வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


hindu saivam

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில,
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3)
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில்
1.தமிழ் வருடங்கள்:-
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
2.அயணங்கள்:-
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
3.ருதுக்கள்:-
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
4.மாஸங்கள்:-
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)2.வைகாசி(ரிஷபம்)3.ஆனி(மிதுனம்)4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)8.கார்த்திகை(விருச்சிகம்)9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)11.மாசி(கும்பம்)12.பங்குனி(மீனம்)
5.பக்ஷங்கள்:-
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்
6.திதிக்கள்:-
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை 2.துதியை 3.திருதியை 4.சதுர்த்தி 5.பஞ்சமி 6.ஷஷ்டி7.சப்தமி 8.அஷ்டமி 9.நவமி 10.தசமி 11.ஏகாதசி 12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
7.வாஸரங்கள்:-
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
8.நட்சத்திரங்கள்:-
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
9.கிரகங்கள்:-
கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)2.சந்திரன்(MOON)3.அங்காரகன்(MARS)4.புதன்(MERCURY)5.குரு(JUPITER)6.சுக்ரன்(VENUS)7.சனி(SATURN)8.இராகு(ASCENDING NODE)9.கேது(DESCENDING NODE)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும்,நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்

மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

11.நவரத்தினங்கள்:-
1.கோமேதகம் 2.நீலம் 3.பவளம் 4.புஷ்பராகம் 5.மரகதம் 6.மாணிக்கம் 7.முத்து 8.வைடூரியம் 9.வைரம்.
12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
              பூதங்கள்
  தன்மாத்திரைகள்
   நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை 2.பொய் 3.களவு 4.கள் அருந்துதல் 5.குரு நிந்தை.
14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ் 2.கல்வி 3.வலிமை 4.வெற்றி 5.நன்மக்கள் 6.பொன் 7.நெல் 8.நல்ஊழ் 9.நுகர்ச்சி 10.அறிவு 11.அழகு 12.பொறுமை 13.இளமை 14.துனிவு 15.நோயின்மை 16.வாழ்நாள்.
15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம் 2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம் 5.விஷ்ணு புராணம் 6.கருட புராணம் 7.அக்னி புராணம் 8.மத்ஸ்ய புராணம் 9.நாரத புராணம் 10.வராக புராணம் 11.வாமன புராணம் 12.கூர்ம புராணம் 13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம் 15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

சகலகலாவல்லி மாலை


சகலகலைகளிலும்சிறக்கவைக்கும்                             சகலகலாவல்லி மாலை
sakalakalavalli malai
 குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாதுஷாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது. தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது. 

 வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! 1.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே! 2.
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே! 3.
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே! 4.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே! 5.
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே! 6.
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே! 7.
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே! 8.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே! 9.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே! 10.

இந்த துதியை திணமும் பாராயணம் செய்து வந்தால் கல்வி கேள்விகளில் மேன்மை ஏற்ப்படும். தவராமல் பாராயணம் செய்து சரஸ்வதி தேவியின் அருளைப் பெருமாறு வேண்டுகிறேண். நன்றி.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

நவகிரஹம்


நவகிரஹ வழிபாடு
நவகிரஹங்கள் பற்றிய முழுமையான விளக்கங்கள்
சூரியன் (ஞாயிறு)
சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்க வேண்டும். சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சந்நிதியை வலம்வந்து சூரிய பகவானை நோக்கி
navakirakam

பதிகங்கள்
காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி !

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய்!

ஸ்லோகம்
ஜபாகுஸும ஸங்காசம்
     காஷ்ய பேயம் மஹத்துதிம்!
தமோரிம் ஸர்வபாபக்னம்
     ப்ரனதொஷ்மின் திவாகரம்!!

சூரிய காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!

என்று ஸ்தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். ஜாதகத்தில் கிரக தோசமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல் வேண்டும்.

ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி
.

சந்திரன் (திங்கள்)
navakirakam

சந்திர தோசம் உள்ளவர்கள் சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று

பதிகங்கள்
அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்மேரு
மலைவல மாகவந்த மதியமே போற்றி போற்றி !

 எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
 திங்களே போற்றி, திருவருள் தருவாய்
 சந்திரா போற்றி, சத்குரு போற்றி
 சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!

ஸ்லோகம்
ததிசங்க துஷாராபம்
       க்ஷீரொர்தார்னவ ஸம்பவம்!
நமாமி ஸசிநம் ஸோமம்
        சம்போர் மகுடபூஷணம்!!

சந்திர காயத்ரி
நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!

என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள்

ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.



செவ்வாய் (அங்காரகன்)
செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று
navakirakam

பதிகங்கள்
வசனநல் தைர்யத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி !

 சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
 குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
 மங்கள செவ்வாய் மலரடி போற்றி
 அங்காரகனே அவதிகள் நீக்கு!

ஸ்லோகம்
தரனி ஹர்ப்ப ஸம்பூதம்
        வித்யுத் காஞ்சன ஸந்நிபம்!
குமாரம் சக்தி ஹஸ்தஞ்ச
        மங்களம் ப்ரனமாம்யகம்!!

அங்காரக (செவ்வாய்) காய்த்ரீ
அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1
தந்நோ குஜ ப்ரசோதயாத்!!

என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோசநிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும், இரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும் . வெற்றி கிட்டும்.

ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்

புதன்
புதனை வழிபடுவதால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும். புதன் கிழமையன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி புத பகவான் முன்
navakirakam

பதிகங்கள்
மதனநூல் முதல்நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி !

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

ஸ்லோகம்
ப்ரியங்கு களிகா ஷ்யாமம்
        ரூபேனா ப்ரதிமம் புதம்!
ஸௌமியம் ஸௌமிய குனோபேதம்
       தம்புதம் ப்ரனமாம்யகம்!!

புதன் காயத்ரீ
புதகிரஹாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ ஸௌமிய  ப்ரசோதயாத்!!

என்று ஸ்தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புக்களும் பொருந்தி வரும்.

ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்

குரு (வியாழன்)
குரு தோசமுள்ளவர்கள் மட்டுமன்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் நவக்கிரகங்களை வலம்வந்து வியாழ பகவானை நோக்கி
navakirakam

பதிகங்கள்
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப்பாதம் போற்றி !

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!

ஸ்லோகம்
தேவாநாஞ்ச ரிஷி நாஞ்ச
          குரும் காஞ்சந ஸன்நிபம்!
புத்தி பூதம்திரிலோகாநாம்
           தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

குரு (வியாழன்) காயத்ரி
ஸுராச்சார்யாய வித்மஹே! சுரஸ்ரேஷ்டாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!

என்னும் ஸ்தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்ளுவதன் பலனாக
நல்வாழ்க்கை, நன்மக்கட்பேறு கிடைக்கும்.

ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி


சுக்கிரன் (வெள்ளி)
அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுஷ்டிக்கப்படவேண்டும்.  நவக்கிரக சந்நிதியை வலம்வந்து சுக்கிர பகவானை வணங்கி 
navakirakam

பதிகங்கள்
மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்
தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி !

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!

ஸ்லோகம்
ஹிமகுந்த மிருனாலாபம்
         தைத்யாணாம் பரமம் குரும்!
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
         பார்க்கவம் ப்ரணமாம்யகம்!!

சுக்கிர (வெள்ளி) காயத்ரி
ராஜதாபாய வித்மஹே! ப்ருகு சுதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!

என்ற ஸ்தோத்திரத்தைப் பாடி வணங்குவதால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.

ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம். செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்


சனீஸ்வரன் (சனி) 
அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச் சனி இருப்பவர்களும் வழிபட்டால் தொல்லைகள் குறைவதோடு நன்மையும் உண்டாகும். பெருமாளை வணங்கி நவக்கிரக சந்;நிதியிலே நவக்கிரகங்களை வலம்வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி

navakirakam
பதிகங்கள்
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள் 
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.!

ஸ்லோகம்
நீலாஞ்சன ஸமாபாஸம்
         ரவி புத்ரம் யமாக்ரஜம்!
சாயா மார்த்தான்ட ஸம்பூதம்
         தம் நமாமி சனீஸ்வரம்!!

சனி காயத்ரி
சனீஸ்வராய வித்மஹே! சாயா புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!

என்று ஸ்தோத்திரம் சொல்லி வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுளும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை மிகவும் விஷேஷம்.

ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்


இராகுபகவான் (ராகு)
navakirakam

இராகு தோசமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் காளி கோவிலுக்குச் சென்று வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் இராகு பகவானை வேண்டி

பதிகங்கள்
வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே !

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி!

ஸ்லோகம்
அர்த்தகாயம் மகாவீர்யம்
        சந்த்ராதித்ய விமர்த்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
       தம்ராஹும் ப்ரனமாம்யகம்!!

ராகு காயத்ரி
ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!

என்ற ஸ்தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நீலம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.


கேதுபகவான் (கேது)
navakirakam
செவ்வாய்க் கிழமைகளில் விநாயரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்கி

பதிகங்கள்
பொன்னையின் னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே !

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.!

ஸ்லோகம்
பலாஷ புஷ்ப ஸங்காஸம்
         தாரகா கிரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
        தம்கேதும் ப்ரணமாம்யகம்!!

கேது காயத்ரி
சித்ர வர்ணாய வித்மஹே! ஸர்ப்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!

என்று தோத்திரம் சொல்லி வணங்கிவர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.


ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்

நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.