வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


hindu saivam

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில,
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3)
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில்
1.தமிழ் வருடங்கள்:-
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
2.அயணங்கள்:-
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
3.ருதுக்கள்:-
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
4.மாஸங்கள்:-
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)2.வைகாசி(ரிஷபம்)3.ஆனி(மிதுனம்)4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)8.கார்த்திகை(விருச்சிகம்)9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)11.மாசி(கும்பம்)12.பங்குனி(மீனம்)
5.பக்ஷங்கள்:-
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்
6.திதிக்கள்:-
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை 2.துதியை 3.திருதியை 4.சதுர்த்தி 5.பஞ்சமி 6.ஷஷ்டி7.சப்தமி 8.அஷ்டமி 9.நவமி 10.தசமி 11.ஏகாதசி 12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
7.வாஸரங்கள்:-
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
8.நட்சத்திரங்கள்:-
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
9.கிரகங்கள்:-
கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)2.சந்திரன்(MOON)3.அங்காரகன்(MARS)4.புதன்(MERCURY)5.குரு(JUPITER)6.சுக்ரன்(VENUS)7.சனி(SATURN)8.இராகு(ASCENDING NODE)9.கேது(DESCENDING NODE)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும்,நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்

மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

11.நவரத்தினங்கள்:-
1.கோமேதகம் 2.நீலம் 3.பவளம் 4.புஷ்பராகம் 5.மரகதம் 6.மாணிக்கம் 7.முத்து 8.வைடூரியம் 9.வைரம்.
12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
              பூதங்கள்
  தன்மாத்திரைகள்
   நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை 2.பொய் 3.களவு 4.கள் அருந்துதல் 5.குரு நிந்தை.
14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ் 2.கல்வி 3.வலிமை 4.வெற்றி 5.நன்மக்கள் 6.பொன் 7.நெல் 8.நல்ஊழ் 9.நுகர்ச்சி 10.அறிவு 11.அழகு 12.பொறுமை 13.இளமை 14.துனிவு 15.நோயின்மை 16.வாழ்நாள்.
15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம் 2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம் 5.விஷ்ணு புராணம் 6.கருட புராணம் 7.அக்னி புராணம் 8.மத்ஸ்ய புராணம் 9.நாரத புராணம் 10.வராக புராணம் 11.வாமன புராணம் 12.கூர்ம புராணம் 13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம் 15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

சகலகலாவல்லி மாலை


சகலகலைகளிலும்சிறக்கவைக்கும்                             சகலகலாவல்லி மாலை
sakalakalavalli malai
 குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாதுஷாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது. தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார். அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது. 

 வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! 1.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே! 2.
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே! 3.
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே! 4.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே! 5.
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே! 6.
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே! 7.
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே! 8.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே! 9.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே! 10.

இந்த துதியை திணமும் பாராயணம் செய்து வந்தால் கல்வி கேள்விகளில் மேன்மை ஏற்ப்படும். தவராமல் பாராயணம் செய்து சரஸ்வதி தேவியின் அருளைப் பெருமாறு வேண்டுகிறேண். நன்றி.