வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

சனி, 20 டிசம்பர், 2014

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
(மார்க்கண்டேயர் அருளியது)
இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம
ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக்
ம்ருத்யுஞ்ஜய: ப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது
நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.
ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா
சரபேஸ்வரர்
இந்த தியான சுலோகத்தை காலையும், மாலையும் கூறி வந்தால் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயிலிருந்தும் விடுபடலாம். இவரை வழிபடுவதால் பேராபத்து, பூகம்பம், தீ விபத்து, மண்மாரி, இடி, புயல், மின்னல், பரிகாரம் காணமுடியாத துன்பம், தீராத வியாதிகள், மனநலம் இல்லாமை, விஷபயம், பூதப் பிரேத பைசாசம் ஆகியவைகளின் பயம் நீங்கும் என வியாசர் லிங்கபுராணம் 96வது அத்தியாயத்தில் கூறியுள்ளார்.தியான ஸ்லோகம்
ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷ?சதுர் பாஹூக:
பாதர் கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
காலாக்னி கோடித்யுதி:
விச்வ ÷க்ஷõப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
ஸத் யோரிபுக் னோஸ்து ந:
மூல மந்திரம்
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர
ஹாஸி, ப்ராணக்ரஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்ரு சம்ஹாரனாய
சரப ஸாலுவாய பக்ஷ?ராஜாய ஹூம்பட் ஸ்வாஸா.
சரபேஸ்வரர் காயத்ரீ
ஓம் ஸாலுவேசாய வித்மஹே பக்ஷ? ராஜாய தீமஹி
தந்நோ சரப : ப்ரசோதயாத்

வியாழன், 18 டிசம்பர், 2014

திருநெல்வேலி மாவட்டம பொய்கை அருள் தரும் ஸ்ரீகுலசேகர அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்குஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மாஹகும்பாபிஸெக விழா 19-3-2014

ஊத்துமாலை பாராதி நகர்அருள் தரும்ஸ்ரீமுத்துமாரிஅம்மன் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மாஹகும்பாபிஷேவிழா 9-4-2014 புதன் கிழமை,





புதன், 17 டிசம்பர், 2014

குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு
ஒவ்வொரு தமிழ்மாதமும் அதிகபட்சமாக இரு முறை சுவாதி நட்சத்திரம் தலா ஒரு நாள் வரை நிற்கும்.அப்படி நிற்கும் நாளன்று,தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்,நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.
இதே சுவாதி நட்சத்திரத்தன்று,திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால்,களத்திரதோஷம்,புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவதிருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும்.
இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.
உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பேய் பிசாசு தொல்லைகள் இருக்குமானால்,நீங்கள் திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.
சதயம் நட்சத்திரம் நிற்கும் நாட்களில் சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு மண்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட, மூட்டுவலி,கைகால் வலிகள் நீங்கும்.மாந்திரீகப்பாதிப்பும் நீங்கும்.


பில்லி, சூன்யம், ஏவல் தொல்லைகளில் இருந்து உங்களை காக்க                                                                                                     சரபேசர் வழிபசரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்..
ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.
இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.
சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.
எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்.
இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. சிதம்பரம் கோவிலில் தனிச் சன்னதி உள்ளது.
ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் - சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்...
ஞாயிற்று கிழமை - பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.. அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் - சரபேசர் சிலை , தூணில் உள்ளது... மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..
சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.
சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்க

 

ஆலங்குளத்தில் 800ஆண்டு பழமையான ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிசேகம் 

ஆலங்குளம்,அக்.11-
ஆலங்குளம் நகர பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள 800ஆண்டு பழமையான ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிசேகம் நேற்று நடந்தது.நேற்றுமுன்தினம் மாலை 5.30மணிக்கு தீர்த்த சங்கிரகணம், வாஸ்து சாந்தி,ப்ரவேச பலி,ரக்சபந்தனம்,கும்ப அலங்காரம்,யாத்ரா ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பிரவேசமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.இரவு 9.30மணிக்கு யந்திரஸ்தாபம் ரத்னா ந்யா சாதிகள் அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது.நேற்று காலை 6மணிக்கு மூம்மூர்த்திகளுக்கு ரக்சபந்தனம்,பிம்ப சுத்தி,இரண்டாம் கால யாக சாலை பூஜையும் அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து திருகுடங்கள் எழுந்தருளலும்,விமான கோபுரம் மற்றும் ஸ்ரீ தேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிசேகம் நடந்தது. யாக பூஜையை நெட்டூர் சிவஸ்ரீ ராமநாத குருக்கள் நடத்தினார். .அந்த விழாவில் முன்னாள் எம்பி ராமசுப்பு,விழா குழுத்தலைவர் எஸ்.எம்.விஷ்ணு நாடார்,தொழிலதிபர் கணபதியா பிள்ளை,தேமுதிக நகர செயலாளர் பழனிசங்கர்,மாவட்ட இந்து முன்னணி தலைவர் பொன்னுசாமி நாடார்,டாக்டர்கள் இளங்கோ,ஆனந்தி இளங்கோ,செந்தில்,பாரத் கேஸ் பாலசுப்பிரமணியன்,பிஸ்வாஸ் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மதியம் அன்னதானம் நடந்தது விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக
செய்திருந்தனர்.