வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

புதன், 17 டிசம்பர், 2014


 

ஆலங்குளத்தில் 800ஆண்டு பழமையான ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிசேகம் 

ஆலங்குளம்,அக்.11-
ஆலங்குளம் நகர பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள 800ஆண்டு பழமையான ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிசேகம் நேற்று நடந்தது.நேற்றுமுன்தினம் மாலை 5.30மணிக்கு தீர்த்த சங்கிரகணம், வாஸ்து சாந்தி,ப்ரவேச பலி,ரக்சபந்தனம்,கும்ப அலங்காரம்,யாத்ரா ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பிரவேசமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.இரவு 9.30மணிக்கு யந்திரஸ்தாபம் ரத்னா ந்யா சாதிகள் அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது.நேற்று காலை 6மணிக்கு மூம்மூர்த்திகளுக்கு ரக்சபந்தனம்,பிம்ப சுத்தி,இரண்டாம் கால யாக சாலை பூஜையும் அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து திருகுடங்கள் எழுந்தருளலும்,விமான கோபுரம் மற்றும் ஸ்ரீ தேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிசேகம் நடந்தது. யாக பூஜையை நெட்டூர் சிவஸ்ரீ ராமநாத குருக்கள் நடத்தினார். .அந்த விழாவில் முன்னாள் எம்பி ராமசுப்பு,விழா குழுத்தலைவர் எஸ்.எம்.விஷ்ணு நாடார்,தொழிலதிபர் கணபதியா பிள்ளை,தேமுதிக நகர செயலாளர் பழனிசங்கர்,மாவட்ட இந்து முன்னணி தலைவர் பொன்னுசாமி நாடார்,டாக்டர்கள் இளங்கோ,ஆனந்தி இளங்கோ,செந்தில்,பாரத் கேஸ் பாலசுப்பிரமணியன்,பிஸ்வாஸ் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மதியம் அன்னதானம் நடந்தது விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக
செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக