வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

தச மஹா வித்யா தேவியர்

     
                                                                                                                                                                                                                                                                ஸ்ரீ சப்தசதி சக்திதேவதா (360 சக்திகள்) நாமாவளி

தேவி மகாத்மியத்திலுள்ள 360 சக்திகளையும் ஸ்ரீ வித்யா நவாவரண பூஜையில் ஒரு ஆவரணத்திற்கு 40 சக்திகளாகக் கொண்டு பூஜிக்க வேண்டும் என்பதை ஸ்ரீ வித்யார்ணவ தந்திரம், கீழே உள்ள வரிகளில் விளக்குவதைக் காணலாம்.

ஓம் நித்யாயை நம
ஓம் ஜகன்மூர்த்தியை நம
ஓம் தேவ்யை நம
ஓம் பகவத்யை நம
ஓம் மஹாமாயாயை நம
ஓம் பிரசன்னாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் முக்திதாயின்யை நம
ஓம் பரமாயை நம
ஓம் ஹேது பூதாயை நம

ஓம் ஸநாதன்யை நம
ஓம் ஸம்ஸார பந்தஹெத்வெயை நம
ஓம் ஸர்வேச்வர்யை நம
ஓம் ஈச்வர்யை நம
ஓம் யோகநித்ராயை நம
ஓம் ஹரிநேத்ர கிருதாலயாயை நம
ஓம் விச்வேச்வர்யை நம
ஓம் ஜகத்தாத்திரியை நம
ஓம் ஸ்திதி ஸம்ஹார ஹாரிண்யை நம
ஓம் நித்ராயை நம

ஓம் விஷ்ணொர்பகவத்யை நம
ஓம் அதுலாயை நம
ஓம் தெஜஸாநிதயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் வஷ்ட்காராயை நம
ஓம் ஸ்வராத்மிகாயை நம
ஓம் ஸ்வதாக்ஷராயை நம
ஓம் த்ரிதாமாத்ரே நம
ஓம் ஸ்வரஸ்வரூபிண்யை நம

ஓம் அனுச்சார்யாயை நம
ஓம் ஸந்தியாயை நம
ஓம் ஸாவித்திரியை நம
ஓம் ஜனன்யை நம
ஓம் பராயை நம
ஓம் ஸிருஷ்டிரூபாயை நம
ஓம் ஜகத்யோன்யை நம
ஓம் ஸ்திதி ரூபாயை நம
ஓம் ஸம்ஹிருதி ரூபாயை நம
ஓம் ஜகன்மய்யை நம

ஓம் மஹா வித்யாயை நம
ஓம் மஹா மாயாயை நம
ஓம் மஹா மேதாயை நம
ஓம் மஹா ஸ்மிருத்யை நம
ஓம் மஹா மோஹாயை நம
ஓம் பகவத்யை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் மஹா ஸுச்யை நம
ஓம் ப்ரகிருத்யை நம
ஓம் ஸத்வாதி குணத்ரய விபாவின்யை நம

ஓம் காளராத்ரியை நம
ஓம் மஹாராத்ரியை நம
ஓம் மோஹாராத்ரியை நம
ஓம் தாரூணாய நம
ஓம் சுரேச்வர்யை நம
ஓம் ஹ்ரீயை நம
ஓம் புத்யை நம
ஓம் போத ஸுலக்ஷணாயை நம
ஓம் லஜ்ஜாயை நம
ஓம் புஷ்டியை நம

ஓம் துஷ்டியை நம
ஓம் சாந்தியை நம
ஓம் கட்கின்யை நம
ஓம் சூலின்யை நம
ஓம் கோராயை நம
ஓம் கதின்யை நம
ஓம் சக்ரிண்யை நம
ஓம் சங்கின்யை நம
ஓம் சாபின்யை நம
ஓம் பாண புகண்டீ பரிகாயுதாயை நம

ஓம் ஸெளம்யாயை நம
ஓம் ஸெளம்யதராயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் பராயை நம
ஓம் பரமாயை நம
ஓம் பரமேச்யை நம
ஓம் ஸதாயை நம
ஓம் அஸதாயை நம
ஓம் அகிலாத்மிகாயை நம
ஓம் நார்யை நம

ஓம் சிவாயை நம
ஓம் ஸிம்ஹவாஹின்யை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் பத்ரகாள்யை நம
ஓம் சண்டிகாயை நம
ஓம் ஜகன்மாத்ரே நம
ஓம் மஹிஷாஸுரமர்தின்யை நம
ஓம் ஆத்மசக்தியை நம
ஓம் சர்வதேவமய்யை நம
ஓம் ச்ரத்தாயை நம

ஓம் குணாத்மிகாயை நம
ஓம் சர்வாச்ராயாயை நம
ஓம் அவ்யாசிருதாயை நம
ஓம் ஆத்யாயை நம
ஓம் சப்தாத்மிகாயை நம
ஓம் வார்த்தாயை நம
ஓம் அர்த்திஹிந்திரியை நம
ஓம் மேதாயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் பவஸமுத்ரநௌகாயை நம

ஓம் அஸங்காயை நம
ஓம் கைடபாராதி ஸ்ருதயைக நம
ஓம் ஹிருதாலயாயை நம
ஓம் கௌர்யை நம
ஓம் ஸதார்த்ர சித்தாயை நம
ஓம் கீர்வாண வரதாயின்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் பத்ராயை நம

ஓம் ரௌத்ராயை நம
ஓம் தாத்ரியை நம
ஓம் ஜ்யோஸ்னாயை நம
ஓம் இந்து ரூபிண்யை நம
ஓம் சுகாயை நம
ஓம் கல்யாண்யை நம
ஓம் ருத்யை நம
ஓம் ஸித்யை நம
ஓம் கூர்மிகாளை நம
ஓம் நைருத்யை நம

ஓம் பூபிருதாம் லக்ஷ்மியை நம
ஓம் சர்வாண்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் துர்கபாராயை நம
ஓம் ஸாராயை நம
ஓம் ஸர்வகாரிண்யை நம
ஓம் க்ஷõந்தியை நம
ஓம் க்ருஸ்நாயை நம
ஓம் தூம்ராயை நம
ஓம் அதிஸெளம்யாயை நம

ஓம் அதிரௌத்ரிண்யை நம
ஓம் ஜகத்பிரதிஷ்டாயை  நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் விஷ்ணுமாயாயை நம
ஓம் சேசனாயை நம
ஓம் புத்தி ரூபாயை நம
ஓம் நித்ரா ரூபாயை நம
ஓம் க்ஷúதாயை நம
ஓம் சாயா ரூபாயை நம
ஓம் சக்தி ரூபாயை நம

ஓம் திருஷ்ணா ரூபாயை நம
ஓம் க்ஷõந்தி ரூபாயை நம
ஓம் ஜாதி ரூபாயை நம
ஓம் லஜ்ஜா ரூபாயை நம
ஓம் சாந்தி ரூபாயை நம
ஓம் ச்ரத்தா ரூபாயை நம
ஓம் காந்தி ஸ்வரூபிண்யை நம
ஓம் லக்ஷ்மீரூபிண்யை நம
ஓம் விருத்தி ரூபாயை நம
ஓம் திருதி ரூபாயை நம

ஓம் ஸ்மிருதி ரூபாயை நம
ஓம் தயாரூபாயை நம
ஓம் க்லீம் துஷ்டிரூபாயை நம
ஓம் புஷ்டி ரூபாயை நம
ஓம் மாத்ரு ரூபாயை நம
ஓம் ப்ராந்தி ரூபாயை நம
ஓம் சுபஹேத்வை நம
ஓம் பார்வத்யை நம
ஓம் கௌசிக்யை நம
ஓம் காளிகாயை நம

ஓம் உக்ரசண்டாயை நம
ஓம் திருஷ்ணாயை நம
ஓம் ஹிமாசல ஹிருதாலயாயை நம
ஓம் தூம்ரலோசன ஹிந்திரியை நம
ஓம் அஸின்யை நம
ஓம் பாசின்யை நம
ஓம் விசித்ர கட்வாங்கதராயை நம
ஓம் நரமாலா விபூஷணாயை நம
ஓம் த்வீபசர்வ பரீதாநாயை நம
ஓம் சுக்ல மாம்ஸாதி பைரவாயை நம

ஓம் அதிவிஸ்தார வதநாயை நம
ஓம் ஜிஹ்வாலலன பீஷணாயை நம
ஓம் நிமக்னாரத்த நயனாயை நம
ஓம் நாதா பூரித திங்முகாயை நம
ஓம் பீமாக்ஷியை நம
ஓம் பீமரூபாயை நம
ஓம் சண்டமுண்ட விநாசின்யை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் லோகவிக்யாதாயை நம
ஓம் பிரும்மாண்யை நம

ஓம் பிரும்மவாதின்யை நம
ஓம் மாஹேச்வர்யை நம
ஓம் விருஷாரூடாயை நம
ஓம் திரிசூல வரதாயின்யை நம
ஓம் மஹா ஹிவலயாயை நம
ஓம் சந்திரரேகாவிபூஷணாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் சக்திஹஸ்தாயை நம
ஓம் மயூரவரவாஹனாயை நம
ஓம் குஹரூபாயை நம

ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் கருடோபரி ஸம்ஸ்திதாயை நம
ஓம் சங்க சக்ர கதா சார்ங்க கட்க ஹஸ்தாயை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் நாரஸிம்ஹியை நம
ஓம் நிருஸிம்மஸ்திருச்யை நம
ஓம் கோரராவாயை நம
ஓம் ஸடா÷க்ஷபஷிப்த நம
ஓம் நக்ஷத்ர ஸம் ஹந்திரியை நம
ஓம் வஜ்ரஹஸ்தாயை நம

ஓம் ஐந்திரியை நம
ஓம் கஜ ராஜோபரிஸ்திதாயை நம
ஓம் ஸஹஸ்ரநயனாயை நம
ஓம் சக்ரரூபாயை நம
ஓம் பீஷணாயை நம
ஓம் சக்தியை நம
ஓம் அத்யுக்ராயை நம
ஓம் சிவாசதநினாதின்யை நம
ஓம் அபராஜிதாயை நம
ஓம் சிவ தூத்யை நம

ஓம் காத்யாயன்யை நம
ஓம் ரக்த பீஜநாசின்யை நம
ஓம் சண்டகண்டிகாயை நம
ஓம் அஷ்டதசபுஜாயை நம
ஓம் உக்ராயை நம
ஓம் நிசும்பாசுரவாதின்யை நம
ஓம் சும்பஹந்த்ர்யை நம
ஓம் பிரபன்னார்த்திஹராயை நம
ஓம் விச்வேச்வர்யை நம
ஓம் ஆதாரபூதாயை நம

ஓம் மஹீரூபாயை நம
ஓம் அபாம்ஸ்வரூபாயை நம
ஓம் அப்யாயன்யை நம
ஓம் அலங்கியவீயதாயை நம
ஓம் பீஜஸ்வரூபிண்யை நம
ஓம் அனந்த வீர்யாயை நம
ஓம் ஸம்மோஹின்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸ்வர்கமுக்திப்ரதாயின்யை நம
ஓம் அசேஷஜன ஹிருத்ஸம்ஸ்தாயை நம

ஓம் நாராயண்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் ஸர்வார்த்த ஸாதிகாயை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் த்ரயம்பிகாயை நம
ஓம் கௌர்யை நம
ஓம் கலாகாஷ்டாதி ரூபாயை நம
ஓம் பரிணாமப்ரதாயின்யை நம
ஓம் சர்வமங்கள மாங்கல்யாயை நம
ஓம் சிவாயை நம

ஓம் சிருஷ்டி ஸ்திதி லயாத்மிகாயை நம
ஓம் சக்தியை நம
ஓம் ஸனாதன்யை நம
ஓம் குணாச்ரயாயை நம
ஓம் குணம்யாயை நம
ஓம் நாராயண ஸ்வரூபிண்யை நம
ஓம் சரணாகத தீனார்த்த பரிணாம ப்ரதாயின்யை நம
ஓம் சர்வஸ்யாத்தி ஹராயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் விஷ்ணுரூபாயை நம

ஓம் ஹம்ஸயுக்தவிமானஸ்தாயை நம
ஓம் பிரும்மாணி ரூபதாரிண்யை நம
ஓம் கௌசாம்பஷுரிகாயை நம
ஓம் சூலசந்திராஹிவரதாரிண்யை நம
ஓம் மஹாவிருஷப கம்ரூடாயை நம
ஓம் மாஹேச்வர்யை நம
ஓம் த்ரைலோத்யத்ராணஸ ஹிதாயை நம
ஓம் கிரீடவரதாரிண்யை நம
ஓம் வ்ருத்தப்ராண ஹராயை நம
ஓம் சிவதூதீஸ்வரூபிண்யை நம

ஓம் ஹததைத்யாயை நம
ஓம் மஹாஸத்வாயை நம
ஓம் கோரரூபாயை நம
ஓம் மஹாரவாயை நம
ஓம் தம்ஷ்ட்ராகராளவதனாயை நம
ஓம் சிரோ மாலாவிபூஷணாயை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் முண்டமதனாயை நம
ஓம் லக்ஷ்மியை நம
ஓம் லஜ்ஜாயை நம

ஓம் மஹாவித்யாயை நம
ஓம் ச்ரத்தாயை நம
ஓம் புஷ்டியை நம
ஓம் ஸதாத்ருவாயை நம
ஓம் மஹாராத்திர்யை நம
ஓம் மஹாவித்யாயை நம
ஓம் மேதாயை நம
ஓம் ஸரஸ்வத்யை நம
ஓம் வராயை நம
ஓம் பூதிதாயை நம

ஓம் தாமஸ்யை நம
ஓம் நியதேசாயை நம
ஓம் ஸர்வத பாணிபாதாந்தாயை நம
ஓம் ஸர்வதோக்ஷிசிரோமுகாயை நம
ஓம் ஸர்வதச்ரணக்ராணாயை நம
ஓம் ஸர்வஸ்வரூபிண்யை நம
ஓம் ஸர்வேசாயை நம
ஓம் ஸர்வபாயை நம
ஓம் ஸர்வசக்தி ஸமன்விதாயை நம
ஓம் ஸமஸ்தரோஹந்திரியை நம

ஓம் விச்வாத்மிகாயை நம
ஓம் விச்வவந்தியாயை நம
ஓம் பாபஹாரிண்யை நம
ஓம் உத்பாதபாக ஜனிதோபஸர்க சயநாசின்யை நம
ஓம் விச்வார்த்திஹாரிண்யை நம
ஓம் த்ரைலோக்யவரதாயின்யை நம
ஓம் நந்தகோபகிரூஹேஜாதாயை நம
ஓம் புத்ரபௌத்ரப்ரவர்தின்யை நம
ஓம் யசோதாகர்பஸம்பவாயை நம
ஓம் விந்தியார்த்திவாஸின்யை நம

ஓம் ரௌத்ரரூபிண்யை நம
ஓம் ரத்ததந்திகாயை நம
ஓம் தாடிமீ குசுமபிரக்யாயை நம
ஓம் அயோனிஜாயை நம
ஓம் சதலோசனாயை நம
ஓம் பீமாயை நம
ஓம் சாகம்பர்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் தானவேந்திரவிநாசிந்யை நம
ஓம் மஹாகாள்யாயை நம

ஓம் மஹாகாள்யை நம
ஓம் மஹாமார்யை நம
ஓம் அஜாயை நம
ஓம் லக்ஷ்மீவிருத்திபிரதாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் சைலபுத்திரியை நம
ஓம் பிரும்மசாரிண்யை நம
ஓம் சண்டகண்டாயை நம

ஓம் விசாலாக்ஷியை நம
ஓம் கூஷ்மாண்டாயை நம

ஓம் வேதமாத்ருகாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் கணேசியை நம
ஓம் விரூபாக்ஷியை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் மஹாகௌர்யை நம
ஓம் மஹாவீர்யாயை நம
ஓம் மஹாபலபராக்ரமாயை நம
ஓம் மயூர குக்குடவ்ருதாயை நம
ஓம் மஹாசக்திதராயை நம

ஓம் அனகாயை நம
ஓம் பிராஹ்ம்யை நம
ஓம் மகேஸ்வர்யை நம
ஓம் கௌமாரிரூபிணீதேவ்யை நம
ஓம் சங்கசக்ரகதாசார்ங்க கிருகீத பரமாயுதாயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் கிருஹீதோக்ர மஹாசக்ராயை நம
ஓம் தம்ஷ்ட்ரோத்ருத வசுந்தராயை நம
ஓம் வராஹரூபிண்யை நம
ஓம் சிவாயை நம

ஓம் நிருஸிம்ஹரூபிண்யை நம
ஓம் ஐந்திரியை நம
ஓம் ஹததைத்ய மஹாபலாயை நம
ஓம் பாப்ரவ்யை நம
ஓம் லோசனத்ரயபூஷிதாயை நம
ஓம் ஸர்வபீதிஹராயை நம
ஓம் காத்யாயன்யை நம
ஓம் த்ரிசூலாதாரிண்யை நம
ஓம் பத்ரகாள்யை நம
ஓம் சண்டிகாளை நம

ஓம் ப்ராமர்யை நம
ஓம் பகவத்யை நம
ஓம் சண்டவிக்ராமாயை நம
ஓம் ஸனாதன்யை நம
ஓம் லோகஸ்வர்காபவர்கதாயை நம
ஓம் மஹீமய்யை நம
ஓம் ஜகத்தாத்ரியை நம
ஓம் அநேக மூர்த்தியை நம
ஓம் விச்வேச்வர்யை நம
ஓம் விச்வாச்ரவாயை நம
ஓம் சப்தசதி சக்தி தேவதாயை நம

ஸ்ரீ வித்யார்ணவ தந்திரத்திலுள்ள தாரித்ரிய த்வம்ஸிநி சப்தசதி சக்தி நாமாவளி

புவனேஸ்வரியை லக்ஷ்மியினுடன் வழிபட வேண்டும். இந்த நாமாக்கள் மகாலக்ஷ்மியின் கல்யாண குணங்களைச் சொல்வதால் புவனேஸ்வரி திரிசதி அர்ச்சனைக்குப் பிறகு இதைச் சொல்லி அர்ச்சிக்க வேண்டும். இதை ஸ்ரீ சக்கரத்தில் பூஜிப்பது விசேஷம்.

ஓம் ஹாரா நூபுர ஸம்யுக்தாயை நம
ஓம் கமலத்வயஹாரிண்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் பரமசிவமய்யை நம
ஓம் சுத்த ஜாம்பூநத ப்ரபாயை நம
ஓம் கமலவஸத்யை நம
ஓம் தேஜோ ரூபாயை நம
ஓம் விஸ்வ பூமோஹிந்யை நம
ஓம் ஸர்வ பூ÷ஷா ஜ்வலாங்யை நம
ஓம் பீஜபூரதராயை நம

ஓம் ஆத்யா சக்த்யை நம
ஓம் ஸகல ஜநன்யை நம
ஓம் கலசதாரிண்யை நம
ஓம் விஷ்ணுவாமாங்க ஸம்ஸ்தாயை நம
ஓம் கமலாலயாயை நம
ஓம் ஸ்ரீமத் ஸெளபாக்ய ஜநன்யை நம
ஓம் பார்கவ்யை நம
ஓம் ஸநாதன்யை நம
ஓம் ஸர்வ கம பலா வாப்தி ஸாதநாயை நம
ஓம் ஏகசுகாவஹாயை நம

ஓம் ஹிரண்யவர்ணாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் சுவர்ண லலிதாஸ்ரஜாயை நம
ஓம் ஸமஸ்தஸம்பத் சுகதாயை நம
ஓம் அகில ஸெளபாக்ய ஜநந்யை நம
ஓம் ஸமஸ்த கல்யாண கர்யை நம
ஓம் ஞானதாயை நம
ஓம் ஹரிப்பிரியாயை நம
ஓம் விஞ்ஞான சம்பத் சுகதாயை நம
ஓம் அஸ்வ பூர்ணாயை நம

ஓம் ஹிரண்மய்யை நம
ஓம் விசித்ர வாக்பூதி கர்யை நம
ஓம் மத்யாயை நம
ஓம் மனோஹராயை நம
ஓம் ஹஸ்திநாத ப்ரமோதாயை நம
ஓம் அனந்தஸெளபாக்யதாயின்யை நம
ஓம் ஸர்வபூதாந்த் ரஸ்தாயை நம
ஓம் ஸவர்ண ப்ராகாச மத்யகாயை நம
ஓம் ஸமஸ்தபூதேஸ்வர்யை நம
ஓம் விஸ்வரூபாயை நம

ஓம் ப்ரபா மய்யை நம
ஓம் தாரித்ரிய துக்கௌக தமோஹந்த்ரை நம
ஓம் பத்மின்யை நம
ஓம் தீனார்த்தி விச்சேத தக்ஷõயை நம
ஓம் க்ருபாகலிதலோசனாயை நம
ஓம் ப்ரணதஸ்வாந்த சோகக்யை நம
ஓம் சரணாகத ரக்ஷணாயை நம
ஓம் சாந்த்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் பத்மஸம்ஸ்தாயை நம

ஓம் கமநீயகுணாச்ரயாயை நம
ஓம் க்ஷõந்த்யை நம
ஓம் தாந்த்யை நம
ஓம் துரிதக்ஷய காரிண்யை நம
ஓம் சசிசேகர ஸம்தாயை நம
ஓம் தனதான்ய ஸம்ருத்திதாயை நம
ஓம் சக்த்யை நம
ஓம் ரக்த்யை நம
ஓம் நித்யபுஷ்டாயை நம
ஓம் ரஜனீகர ஸோதராயை நம

ஓம் கரீஷிண்யை நம
ஓம் பக்த்யை நம
ஓம் பவஸாகர தாரிண்யை நம
ஓம் மத்யை நம
ஓம் ஸித்யை நம
ஓம் த்ருத்யை நம
ஓம் மதுசூதன வல்லபாயை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் ஹிரண்யமாலாயை நம
ஓம் சுப லக்ஷண லஷிதாயை நம

ஓம் அதிதுர்கதி ஹந்த்ரியை நம
ஓம் வரஸத்கதி தாயின்யை நம
ஓம் திவிதேவ கணாராத்யாயை நம
ஓம் புவனார்த்தி விநாசின்யை நம
ஓம் ஆர்த்ராயை நம
ஓம் புஷ்கரிண்யை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் தரணீதர வல்லபாயை நம
ஓம் தாரித்ரிய துக்கஹந்த்ரை நம
ஓம் பயவித்வம்ஸின்யை நம

ஓம் ஸ்ரீவிஷ்ணுவக்ஷஸ்தலாயை நம
ஓம் அசேஷ பூதிதாயை நம
ஓம் லக்ஷணாயை நம
ஓம் அலக்ஷிதாங்யை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மாஸநார்ச்சிதாயை நம
ஓம் வித்யா ஸம்பத்கர்யை நம
ஓம் தேவஸங்கரபிபூஜிதாயை நம
ஓம் பத்ராயை நம
ஓம் பாக்ய ரூபாயை நம

ஓம் நித்யாயை நம
ஓம் நிர்மலபுத்திதாயை நமஓம் ஸத்யாயை நம
ஓம் ஸர்வபூதஸ்தாயை நம
ஓம் ரத்னகர்பாந்தரஸ்திதாயை நம
ஓம் ரம்யாயை நம
ஓம் புத்தாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காந்திமத் பாஸிதாங்காயை நம
ஓம் ஸர்வஸெளக்ய ப்ரதாயை நம

ஓம் தேவ்யை நம
ஓம் பக்தௌகா பயதாயின்யை நம
ஓம் ஸ்வேதத்வீப க்ருதா வாஸாயை நம
ஓம் ஜகன்மாத்ரே நம
ஓம் ஜகன்மய்யை நம
ஓம் ரத்னகர்ப ஸ்திதாயை நம
ஓம் சௌம்யாயை நம
ஓம் க்ஷீராம்புதி க்ருதாலயாயை நம
ஓம் ப்ரஸன்னை ஹ்ருதயாயை நம
ஓம் பரிபூர்ணாயை நம

ஓம் ஹிரண்மய்யை நம
ஓம் வசுந்தராயை நம
ஓம் ஸ்ரீதராயை நம
ஓம் வசுதோக்த்ரை நம
ஓம் க்ருபாமய்யை நம
ஓம் விஷ்ணுப்ரியாயை நம
ஓம் ரத்னகர்பாயை நம
ஓம் ஸமஸ்தபலதாயை நம
ஓம் ரஸாதலகதாயை நம
ஓம் சுவ்ருதாயை நம

ஓம் ஹரிப்ரியாயை நம
ஓம் தரணீகர்ப ஸம்ஸ்தாயை நம
ஓம் ஸமுன்னத முக்யை நம
ஓம் ஸமஸ்தபுர ஸம்ஸ்தாயை நம
ஓம் பரிபூர்ண மனோரதாயை நம
ஓம் கருணாரஸ நிஷ்யந்த நேத்ர த்வய விலாஸின்யை நம
ஓம் ஸர்வராஜ க்ருஹாவாஸாயை நம
ஓம் மஹாலக்ஷ்மீ குணான்விதாயை நம
ஓம் வைகுண்ட நகரஸ்தாயை நம
ஓம் க்ஷீரஸாகர கன்யகாயை நம

ஓம் யோகி ஹ்ருத் பத்ம ஸம்ஸ்தாயை நம
ஓம் கல்பவல்யை நம
ஓம் தயாவத்யை நம
ஓம் பக்தசிந்தாமணயே நம
ஓம் ஆதிமாயே நம
ஓம் ரமாயை நம
ஓம் நிராகாராயை நம
ஓம் ஸாகராயை நம
ஓம் ப்ரும்மாண்ட சயதாரிண்யை நம
ஓம் ஏகநாதாயை நம

ஓம் த்ய லக்ஷ்ம்யை நம
ஓம் அஞ்ஞான ஹந்த்ரை நம
ஓம் குணாதிகாயை நம
ஓம் ப்ரஞ்ஞானலோசனாயை நம
ஓம் ப்ரஞ்ஞான லோசனா நம
ஓம் சேக்ஷவாக் ஜாட்ய மலஹாரிண்யை நம
ஓம் சுஸ்பஷ்ட வாக்தாயின்யை நம
ஓம் ஸர்வஸ்ம்பத் விராஜிதாயை நம
ஓம் ப்ரபாலாவண்ய சுபகாயை நம
ஓம் தோக்த்ரை நம

ஓம் ஸ்வர்ணப்ரதாயை நம
ஓம் ஸமஸ்தவிக்னௌகஹ்ந்த்ரை நம
ஓம் போகதாயை நம
ஓம் விசக்ஷணாயை நம
ஓம் தேவாதிநாத வந்த்யாயை நம
ஓம் தினபோஷண தத்பராயை நம
ஓம் மாங்கல்ய பீஜமஹிமாயை நம
ஓம் நிதிரூபிண்யை நம
ஓம் அநந்தாகாயை நம
ஓம் ஆத்யாதிலக்ஷ்ம்யை நம

ஓம் மஹாஸித்த லக்ஷ்ம்யை நம
ஓம் ராஜ்யலக்ஷ்ம்யை நம
ஓம் திவ்யலக்ஷ்ம்யை நம
ஓம் சுஸ்ரியை நம
ஓம் மங்கள தேவதாயை நம
ஓம் பக்திதாயை நம
ஓம் முக்திதாயை நம
ஓம் புத்திதாயை நம
ஓம் ஸத்கதிப்ரதாயை நம
ஓம் கீர்த்திதாயை நம

ஓம் தனதாயை நம
ஓம் புத்ரபௌத்ர விவர்த்தின்யை நம
ஓம் பத்மாநநாயை நம
ஓம் பத்மோருவே நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் அச்வதாயை நம
ஓம் கோதாயை நம
ஓம் தனதாயை நம
ஓம் மஹாதநாயை நம
ஓம் சந்த்ரசூர்யாக்நி ஸர்வபாயை நம

ஓம் ஜாதவேதாஸ்த்ர ஸ்ம்ஸ்திதாயை நம
ஓம் திக் கஜேந்திர ஸமாராத்யாயை நம
ஓம் திவ்யபூஷண பூஷிதாயை நம
ஓம் பயதாயின்யை நம
ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயை நம
ஓம் ஸர்வார்த்த ஸாதின்யை நம
ஓம் தாரித்ரிய த்வம்ஸின்யை நம

தச மஹா வித்யா தேவியர்

படைக்கும் கடவுளான பிரம்மாவின் 10 புத்திரர்களுள் ஒருவன் தட்சன். அவன் ப்ரஜாபதி ஆவான். தட்சனின் மகள் சதி தேவி (தாட்சாயணி). அவளது கணவன் சிவன். தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து, விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் படி அழைப்பு விடுத்தான். 27 நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட தனது 27 புதல்வியரையும், அவர்களது கணவன் சந்திரனுக்கும் அழைப்பு விடுத்தான். சதி தேவியையும், மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. தந்தையால் அழைக்கப்படாவிட்டாலும், தந்தை நடத்தப் போகவிருக்கும் மிகப்பெரிய யாகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலிலும், சகோதரிகளைக் காண விரும்பியும், முக்கியமாகத் தனது கணவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், தேவர்கள் தங்களது மனைவியருடன் அலங்கரிக்கப்பட்ட வானவூர்தியில், பறந்து செல்வதையும் கண்டு பரவசமடைந்து, கணவன் சிவனிடம் அனுமதி கேட்டு நின்றாள்.

அழையாத விருந்தாளியாகச் சென்று தனது அன்பு மனைவி, அவமானப்படக்கூடாது என்று எண்ணியதால் சிவன் அனுமதி அளிக்கவில்லை. ஒரு சாதாரண கணவனைப் போல் ஆணாதிக்கத்துடன் அனுமதி தர மறுத்த சிவனின் மீதும், ப்ரஜாபதியாக மட்டும் நடந்து கொண்டு, தந்தை என்ற முறையில் அழைப்பு விடுக்காத தட்சன் மீதும் மிகுந்த கோபம் கொண்டு சதி தேவி, தனது சக்தியைக் (ஆதிக்கத்தையும், கோபத்தையும்) காட்ட விரும்பினாள். கண்ணுக்குத் தீட்டும் மை போன்றும், இருட்டினைப் போன்றும் கரிய நிறமுடைய காளியாகத் தோற்றமெடுத்து பயங்கரமான பற்களைக் காட்டி, இடிமுழக்கம் போல் பயங்கரமான சப்தத்துடன் சிரிக்கவும் ஆரம்பித்தாள். தனது மூன்று கண்களையும் ஒருமுறை திறந்து பார்த்த சிவன் பயத்தில் உறைந்தார்.

இரத்தம் சொட்டும் தொங்கிய நாக்கினையும், நிலைகுத்தி நிற்கும் முடியினையும், நான்கு கைகளையும், கோபமான கண்களையும், வியர்வையில் நனைந்த உடம்பினையும் கொண்ட அம்பிகையைக் கண்டு மிகவும் பயந்தார். மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாகக் கொண்டு, தலையில் பிரகாசமான கிரீடத்தையும், 10 கோடி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய பிறைநிலாவை நெற்றியில் சூடியிருந்ததையும் கண்டு இங்குமங்கும் ஓடினார். தேவியோ இடி போல் தொடர்ந்து பயங்கரமாக ஆர்ப்பரித்து சிரிக்கவே, சிவன் எல்லாத் திசைகளிலும் ஓடினார். திரும்பிய 10 திசைகளிலும், தேவியின் 10 விதமான மாறுபட்ட பயங்கரமான தோற்றத்தைக் கண்டார். இந்தப் பத்து தேவியர் தோற்றமே தச மஹா வித்யா தேவியர் தோற்றமாகும்.

சிவனுக்கு நேர் எதிரில் தேவி எடுத்த முதல் தோற்றமே காளி ஆகும். சிவனுக்கு நேர் எதிரில் காளியும், அவருக்கு மேல் தாராவும், வலது பக்கம் ஒல்லியான, சின்னமஸ்தாவும், இடது பக்கம் புவனேஸ்வரியும், பின்பக்கம் எதிரிகளை அழிப்பதில் வல்லவளான பலளாமுகியும், கீழே பைரவியும், தென்கிழக்கே விதவையும், முதியவளுமான தோற்றத்தில் தூமாவதியும், தென்மேற்கே அழகிய திரிபுரசுந்தரியும், வடமேற்கில் மாதங்கியும், வடகிழக்கில் என்றும் பதினாறான ÷ஷாடசீயும் தோற்றம் கொண்டு நின்றனர். இந்த 10 தேவியரும் தந்த்ரா சாஸ்த்திரத்தில் வழிபாட்டிற்குரிய உபாஸனா மூர்த்தங்களாவர். தேவியின் 90 கோடி தோற்றங்களில் தச மஹா வித்யா தேவியர் தோற்றமே முதன்மையானதும், புகழ் பெற்றதுமாகும். தேவியின் இந்தப் பயங்கரமான தோற்றங்களைக் கண்ட சிவன் வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, யாகத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.

தட்சன் யாகசாலையில் கூடியிருந்த அனைவரின் முன் சிவனின் மஹிமையை அறியாமல், அவரது புறத்தோற்றத்தை இழிவாகக் கூறி அவமதித்தான். கணவனின் மனப்பூர்வமான சம்மதமின்றி வந்ததோடு, தேவலோகமே கூடியிருந்த யாக சாலையில் தன்னால் தனது கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தினால் சதி மிகவும் வருந்தினாள். தட்சனால் தான் பெற்ற இந்த உடம்பை அழிக்க எண்ணி தனது யோகசக்தியினால் அக்னியை எழுப்பி, அதில் புகுந்து தனது உயிரை மாய்த்தாள்.

நந்தி தேவனால் இதைக் கேள்வியுற்ற சிவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவித்து தட்சன் யாகத்தை அழிக்கச் செய்தார். அவரும் யாகசாலை வந்து, நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்ட தனது அன்பு மனைவியின் உடலைப் பிரிய மனமில்லாமல் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். சிவனின் கோபத்தினால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து இவ்வுலகினைக் காக்க, விஷ்ணு, சிவனிடமிருந்து தான் பெற்ற சுதர்சனசக்ரம் என்ற சக்ராயுதத்தால், அம்பிகையின் உடலை 51 துண்டுகளாகத் துண்டித்து அவை பூமியில் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலுள்ள முக்கியமான 51 இடங்களில் விழச் செய்தார்.

தேவியின் அங்கங்கள் விழுந்த 51 இடங்களும், சக்தி வாய்ந்த பீடங்களாகவும், புண்ணிய ÷க்ஷத்திர ஸ்தலங்களுமாயின. பைரவரின் காவலுடன் அம்பிகையின் கோயில்கள் 51 சக்தி பீடங்களில் தோன்றி, தேவியின் வழிபாட்டின் மூலம், சதியின் நினைவு நிலை பெற்றது.

தச மஹா வித்யா தேவியர் தோற்றத்தில் ஆரம்பமாகிய தட்சன் யாகம், 51 சக்தி பீடங்கள் தோன்றக் காரணமானதில் முடிவடைந்தது. இந்த தச மஹா வித்யா தோற்றம் மிகவும் பழமையானதாகும். மஹா விஷ்ணு தசாவதாரம் எடுத்த போது தசாவதார காரியங்கள் நிறைவேற உதவியர்கள் தச மஹா வித்யைகளே.

காளி - கிருஷ்ண அவதாரம்
தாரா - ராம அவதாரம்
÷ஷாடசீ - கல்கி அவதாரம்
புவனேஸ்வரி - வராஹ அவதாரம்
திரிபுரபைரவி - நரஸிம்ம அவதாரம்
சின்னமஸ்தா - பரசுராம அவதாரம்
தூமாவதி - வாமன அவதாரம்
பகளாமுகி - கூர்ம அவதாரம்
மாதங்கி - பலராம அவதாரம்
கமலா - மச்ச அவதாரம்

என்று அந்தந்த அவதாரங்களுக்கு உரிய சக்தியை வழங்கியவர் தச மஹா தேவியர்களாவர் என்று முண்டமாலா தந்திரம் கூறுகிறது. இவர்களில் காளி, புவனேஸ்வரி, ÷ஷாடசீ, கமலா, மாதங்கி ஆகியோர் வழிபாடு மட்டுமே இன்றளவும் பின்பற்றப்படுகிறது. தாரா தேவி புத்தமதத்தினரின் வழிபாட்டுத் தெய்வமாகக் கருதப்படுகிறார். தூமாவதி, சின்னமஸ்தா, பகளாமுகி, பைரவி ஆகியோர் வழிபாட்டு முறைகள் மிகவும் கடினமானபடியால், இப்போது அதிகம் வழக்கத்தில் இல்லை. உண்மையான பக்தியுடன் தச மஹா வித்யா தேவியரை வழிபடும் சாதகர்கள், உயர்ந்த ஞானத்தையும், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்.

அதற்கும் மேலாக, மாயா ஜாலம் போன்ற மாரணம், உச்சாடனம், ÷க்ஷõபனம், மோஹனம், த்ராவனம், ஸ்தம்பனம், வித்வேஷனம் என்ற மஹாசக்திகளையும் அடைவர். தச மஹா வித்யா தேவியர் ஒவ்வொருவருக்கும், அஸ்ஸாமில் காமாக்யா என்னுமிடத்தில் தனித்தனியே கோயில்கள் உள்ளன. எனவே சக்தியை வழிபடும் சாக்தர்களுக்கு காமாக்யா ஒரு மிகச் சிறந்த புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.
"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'
தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா.
தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.
1. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.
2. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.
3. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.
4. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.
5 கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழவலம் வரும் நாயகி கமலாத்மிகா.
6. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.
7. திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

8. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும்கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.
9. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

10. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்குஉரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாட படுவதாகசொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ரசாஸ்திரத்தில் ஒன்று போலவும் தேவிமஹாத்மியத் தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

புதன், 14 அக்டோபர், 2015

வாஸ்து சாஸ்திரம்

                                                         
                                                                                                                                                                  1 . தென்மேற்கு மூலை ( கன்னி மூலை ) எப்போதும் சரியாக 90 டிகிரியில் இருக்கவேண்டும். அதில் கவனம் மிகமிகத் தேவை. அதில் கோட்டை விட்டால் ஓட்டை விழுந்தமாதிரிதான். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால், ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள்  சரியாக  90 டிகிரி  அமைப்பில் இருக்கிறது. அந்த சுவற்றுக்கு இணையாக ( பேரலெல் )காம்பவுண்டு சுவர் செல்லவேண்டும். ஆனால், அந்த வீட்டில் அவ்வாறு அமையவில்லை. மேற்கில் காம்பவுண்டு சுவர், வீட்டு சுவர் இரண்டுக்கும் மத்தியில் காலி இடம் 3′ வருகிறது. ஆனால், அது வடக்கில் செல்லச் செல்ல 90 டிகிரி வளர்ந்து வடக்கு பக்கம் 31/2′ யாக வளர்ந்து விடுகிறது. அதனால் வாயு மூலை வளர்ந்து விடுகிறது.  மனைக்கு அது ஒரு குறைபாடே.  எந்த கட்டத்திலும்  வாயுமூலை வளர்ந்திருக்கக்கூடாது.
“வாயுமூலை வளர்ச்சி விவகாரத்தின் வளர்ச்சி” என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.   இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய சிமெண்ட் கலவையை காம்பவுண்டு சுவரின் உட்பக்கம் அப்பியும், செங்கல்லைப் பிளந்து கனத்தைக் குறைத்தும் சரி செய்யலாம்.
2. அடுத்து வரும் பிரச்சினை முன்னதைவிடப் பெரியது. சிக்கலானது.  சீரியஸானது. ஒரு கட்டடத்தை எப்போதும் நான்கு மூலைகள் மட்டும் வருமாறு அமைக்கவேண்டும்.  அதில் அழகிற்காக மூலையைக் கூட்டினாலும், குறைத்தாலும் பிரச்சினைதான். அந்த  வீட்டிற்கு படிக்கட்டுக்கு அடியில் டாய்லெட் அறை அமைந்துள்ளது. வடமேற்கில் டாய்லெட் அறை பெற்றவுடன் மொத்த கட்டடம் வாயுமூலை வளர்ச்சியைப் பெற்றுவிடுகிறது. அதனால், கட்டடம் 1முதல் 6 மூலைகளைப் பெற்றுவிடுகிறது. இது சரியானதல்ல.  நான்கு மூலைகள் மட்டும் வருமாறு மாற்றியமைதுக்கொள்வது மிக அவசியம்.
வாஸ்து பரிகாரம்
வாஸ்து பரிகாரம்
3. அடுத்ததாக மிகவும் கவகிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ‘ ஈசான்ய வெட்டு ‘.  இதுவும் சரி செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.   ” ஈசான்ய வெட்டுக்கு இருக்காது சுகமான வாழ்க்கை ” என்கிறது வாஸ்து சாஸ்திரம்.  அந்த வீட்டில் ஈசான்யத்தில் தூண் உள்ளது. ஆனால், அதை சுவராக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த அமைப்பினால், தரைதளம் ஈசான்ய வெட்டாக அமைகிறது. பார்வைக்கு மேல்தளம் கான்கிரீட் வந்து, ஈசான்யம் வெட்டு இல்லாததுபோல் தோன்றும்.  ஆனால், இந்த மாதிரி அமைப்பு ஈசான்ய வெட்டுதான்.  இதனை சரி செய்வது எப்படி?கிழக்கு பக்கம் தூணோடு இணைக்க ஒரு சுவர் 3/4′ கனத்திற்கு  3′ உயரத்திற்கு கட்ட வேண்டும். அதேபோல் வடக்குப் பக்கம்  தூணிலிருந்து 3/4′ கனத்திற்கு  3′ உயரத்திற்கு சுவர் கட்டவேண்டும். அந்த சுவற்றின்மீது கிரில் வைத்து அழகுபடுத்தலாம். காற்றோட்டமாகவும் இருக்கும். அல்லது மேல் கான்கிரீட் வரை சுவர் எழுப்பி ஜன்னலும் வைத்துக்கொள்ளலாம்.  வடக்குப் பக்கம் மெயின் டோருக்கு எதிரில் ஒரு சிறிய கேட் அல்லது கதவு வெளியேவர வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அமைப்பதில் கட்டடம் வாயுமூலை வளர்ச்சி தடுக்கப்பட்டு  மொத்த கட்டடம்  நாலு மூலைகளைக் கொண்டதாகவே அமையும்.
4. இன்னுமொரு பிரச்சினை என்னவென்றால், ஈசான்ய உச்ச பகுதியில்  மெயின் கேட் இருப்பது நல்ல அமைப்புதான். ஆனால், அந்த கேட் மூலம் வெளியே மெயின் ரோட்டிற்கு செல்லும் வழி நேராக அமையாமல், ஆக்கிநேய நடையாக அமைந்துவிட்டது. அவ்வாறு அமைந்தால், குடிப்பழக்கம் , விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தவீட்டு உரிமையாளரின் மகன் கீழே விழுந்து மிகுந்த பொருட் செலவு செய்தும் உள்ளார். அதனை சரி செய்ய கேட்டை நேராக மெயின் ரோட்டிற்கு செல்லும்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
எனவேவாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு ஆழமான விஷயம். எப்போதும்  தேர்ந்த அறிவுடனும் தெளிவுடனும், வாஸ்து சம்பந்தப்பட்ட மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியம்.  அரைகுறையாக எதையாவது செய்தால், வேறுவிதமான தொல்லைகள் ஏற்படலாம் என்பதால், நன்கு விஷயமறிந்தவர்களின் ஆலோசனையைப் பெற்றபின் வாஸ்து மாற்றங்களைச் செய்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

வாஸ்து

                               வாஸ்து                                                                            
                             முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘  என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ  அல்லது அந்த மனையிலோ  வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.  இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.

வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு,  வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி  அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட  அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘  (எனெர்ஜி )யானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.
2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.
3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.
4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.
5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.
6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின்,  வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.

ஜன்னல்கள்:

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.  ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.
2.  பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.
3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.
5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.
படுக்கையறை:
நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.
2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.  வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.
3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.
4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.
5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.
.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.
7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

சமையலறை:

நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால்,  தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.
1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.
2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.
3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.
4.  டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.
5.  சமைக்கும்போது  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  இருந்தபடி சமைக்கவேண்டும்.

பூஜையறை:

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.
2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.
4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.
5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.
6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.
7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது.
8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.
9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.
10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

கழிவறைகள்:

1. வடமேற்கிலும், வடக்கிலும்  குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.
2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.
3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.
4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.
5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.
6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

வாஸ்து குறைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள்

                                                                                                                                                                                                                   
                                                                                                                     வாஸ்து குறைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள் கை வளமாக அமைய வாஸ்து சாஸ்திரம் நமக்கு வழிகாட்டுகிறது. வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் நிறைந்திருக்கும் என்பது நூறுக்கு நூறு உண்மை. அதை நாம் சரிவர கடைப்பிடித்தால் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நிச்சயம்.
பிளாட்டில் அதையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்க முடியாது பாருங்கள். சரி, அந்த சமயத்தில் நாம் என்ன பரிகாரம் செய்யலாம்?

* ஈசான மூலையில் (வட கிழக்கு) பகுதியில் சிறிய பாத்திரம் ஒன்றில் தினமும் தண்ணீர் நிரப்பி வையுங்கள். அவ்வாறு வைப்பதால் கெட்டவை அனைத்தும் தண்ணீர் ஈர்த்துக்கொள்ளும், எந்த பாதிப்பும் உங்களை அண்டாது.
* வீட்டினுள் நுழையும் போது கண்ணில் தென்படுவது போல் வண்ண மீன் தொட்டியை வைக்கலாம்.
* பசுமையான செடிகளை வளர்க்கலாம்.
* மஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு ஜன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை போடலம்.
* மா இலை தோரணம் முக்கியமானவை. மா இலைக்கும், வேப்பிலைக்கும் கெட்டவைகளை தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உள்ளது. அதனால் தான், நம் வீட்டில் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் மா இலைக்கு முக்கிய பங்கு தருவோம். குழந்தைகள் உள்ள வீட்டில் தினமும் மாயிலை, வேப்பிலை கலந்து கட்டி வந்தால் தொற்று நோய்கள், பூச்சிகள் எதுவும் பாதிக்காமல் இருக்கும்.
* பஞ்சகவ்யத்தை (பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமயம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து வரலாம்.
* இனிமையாக ஒலிக்கும் வின்ட்செம்-களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். கண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டி வைக்கலாம். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மாட்டி வைத்தால் நல்லது. வாஸ்து பரிகார யந்திரத்தை பிரதிஷ்டை செய்து மாட்டலாம்.
இவைகளை பின்பற்றினால் வாஸ்வினால் ஏற்பட்ட குறைகள் அனைத்தும் விலகும்.

புதன், 7 அக்டோபர், 2015

அறுபதாம் கல்யாணம்

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன




                                                                                                                                                                                                                       
 அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது.
60 வயசுக்கு என்ன விஷேசம்?
சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்.
நம்மள போல வேலை செய்பவர்களும் ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம்.
அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...
கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..
20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை
20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை
40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை
60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம். 60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.
அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்லுது?
மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.
இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி... குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..
பெயரிடப்பட்ட தமிழ் ஆண்டுகள் அறுபது. பிரபவ, விபவ என்று
சாஸ்திரங்களின் படி மனிதனுக்கு என்று வழங்கப்பட்ட நிறைந்த ஆயுள் என்பது 120. கிருஷ்ணர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்கிறது புராணங்கள்.
பகல் இரவு என்பது போல 60 ஆண்டுகள் முதல் சுற்று முடிந்து இரண்டாம் அறுபது ஆண்டுகள் ஆரம்பமாகிறது.
முதல் அறுபது ஆண்டுகளில் லௌகீக(கர்ம) வாழ்க்கை வாழ்கிறோம். இரண்டாம் அறுபது ஆண்டுகள் கடமைகள் முடித்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.
அறுபதாம் கல்யாணம் செய்வதால்
1. நாம் நம் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கிறோம்.
2. கர்மத்தின் காரணமாக நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி, பரிகாரம் என்ற பெயரில் மனதை சுத்தமாக்கிக் கொள்கிறோம்
3. இனி தர்ம வழியிலான பொதுவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உறுதிகொண்டு இவ்வளவு காலம் கூட வந்த மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத நல்லற வாழ்வை தருகிறோம்.
இதைச் செய்யா விட்டால் ஒன்றும் பெரிய தவறு இல்லை, நாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி புதுவாழ்வை தொடங்கா விட்டாலும்
ஆனால் உடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்க்கவாவது அறுபதாம் கல்யாணம் செய்யலாம்.
புரிந்து கொண்டாடினால் எவ்வளவு சந்தோஷம்.
80 வருஷம் அப்படீன்னு சொல்ல ஒரு விஷேசம் இருக்கு தெரியுமா?
ஒரு வருஷத்துக்கு 365.25 நாட்கள். அப்படின்னா 80 வருஷங்களுக்கு
29220 நாட்கள். இதை 29 ஆல வகுப்போம். 1007.58
இன்னாடா தாமரை கணக்கு பண்ணுறாரே அப்படின்னு யோசிக்காதீங்க..
80 வயசில் 1008 பௌர்ணமி பார்த்திருப்போம் அப்படீங்கறதை தான் இந்த சின்னக் கணக்கு சொல்லுது..
இது ஒரு முக்கியமான மேட்டர் இல்லியா?
அப்பால அண்ணாத்தே இன்னா சொன்னாரு
பகல் - இரவு கணக்கு...
எப்படி 20, 40, 60 அப்புடிக்கா வாழ்வில் எப்படி பொறுப்பு மாறுதோ
அதாவது 
0 வயசில பொறந்தோம்
20 வயசுல கண்ணாலம்...
40 வயசுல குழந்தைக்கு கண்ணாலம் பண்ணி வச்சோம்
இது பகல்
60 வயசில முதுமை வாழ்க்கை ஆரம்பம்
அப்படி 60-80 ல முதியவரா வாழ கத்துக்கறோம்..
80 - 100 முதியவர்களா வாழறோம்
100-120 முதியவர்களுக்கும் வழிகாட்டுகிறோம்.
இப்டீக்கா
எப்படி காலை மதியம் மாலை அப்படின்னு பகலில் மூணு இருக்கோ அதே மாதிரி
முன்னிரவு நள்ளிரவு பின்னிரவுன்னு மூணு இருக்கோ அப்படி
20, 20 வருஷமா வாழ்க்கையை பிச்சி பிசைஞ்சு வாழச் சொல்லி அண்ணாத்தேங்க சொல்லிக் கொடுத்திருக்காங்கோ..
அதான் நூறு வயசு வாழ்ந்திட்டா கனகாபிஷேகம் செஞ்சு முழுமை அடைந்த ஆத்மா அப்டீன்னு கொண்டாடறோம்.
நம்மகிட்ட தான் இந்த பிளானும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது
என்ன பிரச்சனை என்றால் இதையெல்லாம் விளக்கம் சொல்லாம நம்ம பெரியவர்கள் சொல்லிக் கொடுத்து வருவதுதான்.
சாத்திரங்கள் மறந்து சடங்குகள் மட்டும் வாழ்வதால் சாதிகளும் சடங்களும் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன.
இப்ப ஆரம்பத்திலிருந்து வர்ரேன்..
(மறுபடியும் ஆரம்பமா என அழாதீங்க)
1 நிமிடத்திற்கு அறுபது வினாடிகள்.
1 நாளுக்கு அறுபது நாழிகைகள்
மொத்தம் 60 ஆண்டுகள் என அறுபது காலக் கணக்கில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று.
ஒரு நாளை 12 ஆகப் பிரிப்போம்..
2 மணி நேரம் ஒரு இலக்கினம் அதாவது ஒரு இராசிமண்டலம் அதாவது வானப்பகுதியின் 30 பாகைகள்.
இரண்டு இலக்கினங்கள் சேர்ந்தால் ஒரு பொழுது.
அதாவது ஒரு பொழுதுக்கு 4 மணி நேரம்..
பகலில் மூன்று பொழுது, இரவில் மூன்று பொழுது ஆக ஆறு பொழுதுகள்
காலை, மதியம், மாலை, முன்னிரவு நள்ளிரவு பின்னிரவு என ஆறு பொழுதுகள்..
பகல் இரவு என இரண்டு வகை.
சரி ஒரு வருடத்தை எடுத்துக் கொள்வோம்
அதிலும் 12 மாதங்கள் (12 லக்கினங்கள்)
ஆறு பொழுதுகள் போல ஆறு பருவங்கள்
கார்காலம், குளிர்காலம், வசந்தகாலம், இளவேனில், முதிர்வேனில், இலையுதிர்காலம்
இரண்டு அயனங்கள், இரவு பகல் போல..உத்தராயணம், தட்சிணாயினம்..
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இவை உத்தராயணம்
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி இவை தஷிணாயனம்
இளவேனில் = சித்திரை, வைகாசி
முதுவேனில் = ஆனி, ஆடி
கார் = ஆவணி, புரட்டாசி
கூதிர் = ஐப்பசி, கார்த்திகை
முன்பனி = மார்கழி, தை
பின்பனி = மாசி, பங்குனி
நன்கு கவனியுங்கள் பின்பனிக் காலத்தில் ஆரம்பிக்கிறது உத்தராயணம். நமது விடியலும் அப்படித்தான் குளிராகவே இருக்கிறது...
அதன் பின் வருவது கோடை,, அதாவது மதியம்...இள்வேனில் எனலாம்
அதன் பின்வருவது முதுவேனில் அதாவது மாலை.. முதுவேனிலின் இறுதியில் மழை பெய்யும். அதே போல் பகல் முழுதும் வெயிலடித்து மழை மாலையின் இறுதியில் வரும்..
இதன்பின் தஷிணாயனம் ஆரம்பமாகிறது. அதாவது இரவு ஆரம்பமாகிறது..

முன்னிரவு என்பது மழைக்காலத்திற்கு சரியாகிறது
நள்ளிரவு என்பது முன்பனிக் காலமாகவும்
விடியல் என்பது பின்பனிக் காலமாகவும் இருக்கிறது.
அதாவது ஒரு நாளைப் பிரித்த விதத்திலும் ஒரு ஆண்டைப் பிரித்த விதத்திலும் ஒற்றுமை இருக்கிறது..
அதுக்கு இந்தப் படத்தைப் பாருங்க...
மனிதன் பிறக்கும் பொழுது அவனுக்கு மிகுந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. போர்வைக்குள் பதுங்கும் விடியற்காலம் போல.
முதல் 2 மணிநேரம் போல அதாவது தை மாதக் குளிருக்கு போர்த்துதல் போல முதல் 10 வருடங்கள் குழந்தையாக பொத்திப் பொத்தி வளர்க்கப்படுகிறான். காலை 6 லிருந்து 8
அடுத்த இரண்டு மணிநேரம் போல அதாவது காலையில் பணிகள் ஆரம்பம் செய்வதைப் போல, அடுத்த 10 வருடம் மாசி மாதம் வசந்தத்தை அனுபவிக்கிறான். மலர்கிறான்..8 லிருந்து 10 வயது 20 வரை
அடுத்து பங்குனி வெயில் ஆரம்பிக்கும் காலம். அதாவது 10 மணி முதல் 12 மணிவரை... இந்தப் பத்துவருடங்கள் கல்யாணம் ஆகி சூடு ஏற ஆரம்பித்து விட்டது. 20 லிருந்து 30 வரை
அடுத்து சித்திரை மாதம், அதாவது 12 மணி முதல் 2 மணி வரை அதாவது 30 லிருந்து 40 வயது வரை.. கடுமையாக உழைக்க வேண்டிய காலம். வெயில் ஏறுவதைப் போல பொறுப்புகளும் கூடி வியர்த்து விடுகிறது.. கத்திரி வெய்யில் மண்டையைப் பிளக்கும் காலம்.
அடுத்து வைகாசி கத்திரி வெய்யில் உக்கிரம் தாண்டி மழை ஆரம்பிக்கும் காலம். அதாவது மகன் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலம்... 40 லிருந்து 50 வரை அதாவது 2 லிருந்து 4 மணி வரை.. வெயில் குறைய ஆரம்பிக்கிறது..
அடுத்து ஆனி மாதம்.. மழைக்காலம் 4 லிருந்து 6 மணிவரை நமக்கு. நமது மகன் சம்பாதிக்கிறான். பணம் மழையாய் கொட்டுகிறது...வயது 50லிருந்து 60 வரை.. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம்
இது முடிந்து இரவு ஆரம்பமாகிறது. தட்சிணாயனம் ஆரம்பமாகிறது.. அதாவது நமது இரண்டாம் அறுபது வருட சுழற்சி ஆரம்பம்..
60 லிருந்து 70 வரை ஆடிமாதம் போல.. ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அது மாதிரி நல்லவைகளை மனதில் விதைத்துக் கொள்ள வேண்டிய காலம். இரவு என்பது நான் உறங்க வேண்டிய நேரம். அதாவது இவ்வளவு காலம் இருந்த நான் என்ற அகந்தை உறங்க வேண்டிய காலம்.
70 லிருந்து 80 வரை ஆவணி மாதம் போல.. ஆடியும் ஆவணியும் தென்மேற்கு பருவக்காற்று காலம், விதைத்து பயிர்வளர்ப்பது போல ஆன்மீகம் நம்மில் விதைக்கப்பட்டு வளரவேண்டிய காலம். மாலை 6 லிருந்து 10 வரை தூங்கத் தயாராகி விடுகிறோம் அல்லவா
80ல் இருந்து தொண்ணூறு வரை, தொண்ணூறிலிருந்து 100 வரை இவை இரண்டும் அடை மழைக்காலம். நள்ளிரவு 10 லிருந்து 12, 12 ல் இருந்து 2 வரையிலான காலம். அகந்தை அழிந்து நம்மை மறந்து அடை மழையாய் உலகிற்கும் அன்பும் நல்வழியும் அளவான அறிவுரைகளாய் தரும் காலம்.
100 லிருந்து 110, 110 ல் இருந்து 120 இரண்டும் விடியற்காலம். கார்த்திகையும் மார்கழியும் இறைவனின் மாதங்களாக கருதப்படுகின்றன்..
மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். விடியற்காலம் 4-6 ப்ரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. இது ஞான ஒளி பிரகாசிக்க பரம ஞானம் பெறும் காலமாகும்
அதாவது நாள், வருடம், மனித ஆயுள் மூன்றிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது நமக்கு இன்றுதான் புரிகிறது..
ஒரு முழு நாள், ஒரு முழு வருடம் ஒரு முழு வாழ்க்கை என்ன என்பதும் விளங்குகிறது..
இத்தனையும் இங்கேதான் இருந்தது நமக்குத் தெரியாமல்..
ஆறு காலங்கள், ஆறு பருவங்கள், ஆறு வாழ்க்கைப் பகுதிகள் அப்படின்னு பார்த்த நாம ஆறோட இன்னும் பல பரிமாணங்கள் நம் வாழ்க்கையில் கலந்து ஆறு (வழி ) காட்டுவதைப் பார்க்கலாம்.
எத்தனை நீரென்றாலும் ஆற்று நீர்தான் நல்ல நீர்
எத்தனை தெய்வமென்றாலும் ஆறுமுகன் தான் தமிழ் தெய்வம்
அவனுக்கு படை வீடுகளும் ஆறு
ஆறு அறிவுகளும் படைத்தவன் தானே மனிதன்.
ஆறின்றி ஆருண்டு?
தேன் கூட்டின் அறுகோண வடிவம் வேற கண்முன் வந்து கண்ணா மூச்சி ஆடுது.
உயிருக்கு ஆதாரமான கரிமத்தின் அடிப்படையும் ஆறு புரோட்டான்கள் எலெக்ட்ரான்கள் கொண்ட அமைப்புதான்.
உலக எரிபொருளின் அடைப்படை மூலக்கூறு பென்சீனின் அடிப்படையும் ஆறு..
அட்ட போங்கப்பா.. ஆறு ஆறுன்னு யோசிக்க யோசிக்க ஆறாம சூடா எண்ணங்கள் வந்துகிட்டே இருக்கே...
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
அப்படின்னு இப்ப பாடறப்ப, புதுச் சந்தோசம் கிடைக்கிறதே..
அதனால ஆறு என்பதின் அடிப்படைய பலமா ஆராய வேண்டியதிருக்கு,
முதலில் சொன்னதை கொஞ்சம் அங்க இங்க தட்டி ஒடுக்கெடுத்து டிங்கரிங் செய்து மீண்டும் தெளிவா
ஒரு நாளின் காலம், ஒரு ஆண்டின் பருவம், ஒரு மனிதனின் பருவங்கள் எனப் பிரிச்சு மேய்கிறேன்
ஒரு நாள் - ஒரு வருடம் – ஒரு வாழ்க்கை!
காலம் காட்டும் இவை மூன்றும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. எப்படிப் பேரண்டம் ஒழுங்கற்றது போலத் தோன்றினாலும் ஆழ்ந்து ஆராய்ந்தால் எப்படி ஒரு ஒழுங்கு நியதி அமைந்திருக்கிறதோ அப்படி இந்தக் கால அமைப்பிலும் ஒரு ஒழுங்கு அமைப்பு உள்ளது.
ஒரு நாளை இரண்டிரண்டு மணி நேரமாக 12 ஆக பிரிக்கலாம்.
ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரிக்கலாம்
ஒரு வாழ்க்கையை 10 ஆண்டுகள் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கலாம்
ஒரு நாளில் இரவு – பகல் என இரண்டு பகுதிகள்
ஒரு ஆண்டில் உத்தராயணம் தட்சிணாயனம் என இரு பகுதிகள்
ஒரு வாழ்க்கையில் கர்ம வாழ்க்கை – தர்ம வாழ்க்கை என இரு பகுதிகள்
ஒரு நாளில் காலை நண்பகல் மாலை முன்னிரவு நள்ளிரவு பின்னிரவு என 6 பிரிவுகள்
ஒரு வருடத்தில் பின்பனி, வசந்தம்(இளவேனில்), கோடை (முதுவேனில்), கார்(மழை), கூதிர்(பின் மழைக் காலம்), முன்பனி என ஆறு பருவங்கள்
ஒரு வாழ்க்கையில் குழந்தை, இளமை, நடுத்தரமனிதன், முழுமனிதன், பெரியவர், தெய்வீகம் என ஆறு பருவங்கள்
இவ்வளவு மட்டும் தானா? இன்னும் நுணுக்கமான ஒற்றுமைகள் உண்டு.
முதல் காலகட்டம் – காலை – குளிர்காலம் – குழந்தைப் பருவம்
நாள் பிரிவு : காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை . விழித்து உடல்சுத்தி செய்து நம் உடல்பேண வேண்டிய காலம்
வருடப் பிரிவு : தை மாதம் – பின்பனி – குளிருக்கு வாடைக்காற்றுக்கு நம் உடலை பேணிக்காக்கும் காலம் அறுவடை முடிந்து நமைக் காக்க களஞ்சியங்கள் நிறைந்துள்ள காலம்,
வாழ்க்கைப் பிரிவு : 0- 10 வயது வரை. நம்மை பெற்றோரும் மற்றோரும் பேணும் காலம். குழந்தைப் பருவம்
இரண்டாம் காலகட்டம் – முன்பகல் – வசந்தம் – இளமைப் பருவம்
நாள் பிரிவு : 8:10 மணிவரை உணவுண்டு நம் தொழிலுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டு போய் தொழில் ஆரம்பிக்கும் காலம்,
வருடப் பிரிவு : மாசி மாதம் – வசந்தத்தின் ஆரம்பம். வண்ண மலர்கள் பூத்துக்குலுங்க.. உலகே பசிமையாய் மாறும்
வாழ்க்கைப் பிரிவு : 10-20 வயது வரை.. கல்வி கேள்விகளில் தேர்ந்து தொழில் கற்று வளரும் காலம்.
மூன்றாம் காலகட்டம் – முற்பகல் – வசந்தம் – இளமைப் பருவம்
நாள் பிரிவு : காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை . உழைக்கும் காலம்.
வருடப் பிரிவு : பங்குனி மாதம் – வசந்தம் – வரப்போகும் கோடைக்கும் மாரிக்காலத்திற்கும் தயாராகும் காலம்,
வாழ்க்கைப் பிரிவு : 20- 30 வயது வரை.இளமைப் பருவம். திருமணம், மக்கட் பேறு என வசந்தங்கள் வாழ்க்கையில்
நான்காம் காலகட்டம் – நண்பகல் – கோடை – நடுத்தரப் பருவம்
நாள் பிரிவு : 12:00 2:00 மணிவரை மதிய உணவுண்டு மறுபடி முழு உழைப்பு செய்யும் காலம் (மதிய தூக்க நேரமல்ல)
வருடப் பிரிவு : சித்திரை மாதம் – கோடை. வெயில் அதிகரித்து சூரியன் உச்சியைச் சுட்டெரிக்கும் காலம்.
வாழ்க்கைப் பிரிவு : 30-40 வயது வரை.. நடுத்தர வயது. உழைப்பி குடும்ப மேன்மை என கடமைகள் சுட்டெரிக்கும் காலம்
ஐந்தாம் காலகட்டம் – நண்பகல் – கோடை – நடுத்தரப் பருவம்
நாள் பிரிவு : 2:00 4:00 மணிவரை முழு உழைப்பு செய்யும் காலம் (மதிய தூக்க நேரமல்ல)
வருடப் பிரிவு : வைகாசி மாதம் – கோடை. வெயில் அதிகரித்து சூரியன் உச்சியைச் சுட்டெரிக்கும் காலம். இதன் இறுதியில் தென்மேற்கு பருவ மலை ஆரம்பம்.
வாழ்க்கைப் பிரிவு : 40-50 வயது வரை.. நடுத்தர வயது. உழைப்பி குடும்ப மேன்மை என கடமைகள் சுட்டெரிக்கும் காலம். இதன் இருதியில்குழந்தைகள் வளர்ந்து உதவ தயார்
ஆறாம் காலகட்டம் – பிற்பகல் – மழை – முழு மனிதன்
நாள் பிரிவு : 4:00 6:00 மணிவரை வேலைகளை, கடமைகளை முடித்து இரவிற்குத் தயாராகும் காலம்.
வருடப் பிரிவு : ஆனி மாதம் – தென் மேற்கு பருவ மழை. .
வாழ்க்கைப் பிரிவு : 50-60 வயது வரை..முழு மனிதன். வாரிசுகள் மணம் முடித்து தொழில் ஆரம்பிக்கும் காலம்.
ஏழாம் காலகட்டம் – மாலை –மழை – முழு மனிதன்
நாள் பிரிவு : 6:00 8:00 அமைதியான உறக்கத்திர்கு தயாராகும் காலம்.. நல்ல விஷயங்களை சிந்திக்க கேட்க வேண்டிய காலம்,
வருடப் பிரிவு : ஆடி மாதம் – மழைக் காலம். விதைப்பு நடக்கும் காலம். அதிகரித்து சூரியன் உச்சியைச் சுட்டெரிக்கும் காலம்.
வாழ்க்கைப் பிரிவு : 60-70 வயது வரை.. முழு மனிதன். மகன் பொறுப்பேற்றாயிற்று. நல் கருத்துக்களை சிந்தித்து தது குடும்பத்தில் விதைக்க வேண்டிய காலம்.
எட்டாம் காலகட்டம் – முன்னிரவு – பின் மழை – பெரியவர்
நாள் பிரிவு : 8:00 10:00 அமைதியாக உறங்க வேண்டிய காலம்.
வருடப் பிரிவு : ஆவணி மாதம் – பின்மழைக் காலம். அதாவது அடை மழைக் காலம். பயிர் வளரும். சேதமில்லாமல் பாதுகாக்க வேண்டிய காலம்.
வாழ்க்கைப் பிரிவு : 70-80 வயது வரை.. குடும்பம் மற்றும் சுய அமைதி நாடும் காலம், குடும்பம் வளர்வதைக் கண்டு மகிழும் காலம்
ஒன்பதாம் காலகட்டம் – இரவு – பின்மழை – மூத்தவர்
நாள் பிரிவு : 10:00 12:00 மணிவரை உறங்கும் நேரம்
வருடப் பிரிவு :புரட்டாசி மாதம் –தென்மேற்கு பருவமழையின் இறுதிக் காலம்
வாழ்க்கைப் பிரிவு : 80-90 வயது வரை.. முதியவர். தான் என்ற அகங்காரம் இன்றி அமைதியான வாழ்க்கை.
பத்தாம் காலகட்டம் – நள்ளிரவு – கூதல் காலம் –மூத்தவர்
நாள் பிரிவு : 12:00 2:00 மணிவரை ஆழ்ந்த உறக்ககாலம்.
வருடப் பிரிவு : ஐப்பசி மாதம் – வட மேற்கு பருவ மழை. . குளிர்காற்று அடிக்கும்
வாழ்க்கைப் பிரிவு : 90-100 வயது வரை..பெரியவர். அமைதியான உறக்கம் போன்ற வாழ்க்கை. .
பதினோராம் காலகட்டம் – அதிகாலை –கூதல் காலம் – முன்னோர்
நாள் பிரிவு : 2:00 4:00 உறக்கத்தின் இறுதிக் காலம்.
வருடப் பிரிவு : கார்த்திகை மாதம் – மழை குறைந்து குளிர் வளரும் காலம்.. முகில்களற்ற வானம். தீப காலம்
வாழ்க்கைப் பிரிவு : 100-110 வயது வரை.. தீபம் போல ஞானம் தோன்றும் காலம்
பனிரெண்டாம் காலகட்டம் – விடியற்காலை – குளிர் – முன்னோர்
நாள் பிரிவு : 4:00 6:00 உறக்கம் விழிக்கும் காலம். பிரம்ம முகூர்த்தம். தெளிவான மாசற்ற காற்று கிடைக்கும் காலம்.
வருடப் பிரிவு : மார்கழி மாதம் – குளிர் காலம். இறைவனின் மாதமாக அறியப்படுவது
வாழ்க்கைப் பிரிவு : 110-120 வயது வரை.. குடும்பம் மற்றும் சுய அமைதி நாடும் காலம், தெய்வமாய் வாழும் காலம். குழந்தை போன்ற பாதுகாப்பும் தேவை
குழந்தைக்கு உபநயனம் - வசந்த விழா (நம்ம ஹோலி, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம்)
திருமணம் - கோடை விழா (சித்திரைத் திருவிழா)
குழந்தைகளின் திருமணம் - ஆடிப் பெருக்கு.
அறுபதாண்டு நிறைவு - முன்னோர் வழிபாடு (மஹாளய அமாவாசை)
எண்பதாண்டு நிறைவு - தீபத்திருவிழா (தீபாவளி, கார்த்திகை தீபம்)
நூறாண்டு நிறைவு - அறுவடைத் திருவிழா (பொங்கல்)
காலமும் பருவமும் பின்னிப் பிணைய திருவிழாக்களும் சேர்ந்திருப்பது எவ்வளவு ஆழமான தத்துவம்.
     
                                                                                                                                                             அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது. சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்.
நம்முடைய தமிழ் ஆண்டுகள் அறுபதாகும்.ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கின்றது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நட்சத்திரத்தில், எந்த திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும். இந்த அறுபதாம் ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒருபெரும் விழாவாக அவர்கள் பெற்ற குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய் இருந்து வருகிறது.
இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் அல்லது அறுபதாம் கல்யாணம் என்பார்கள்.தன் துணையுடான அறுபதாம் கல்யாணம் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது அதற்கு தெய்வ அருள் நிச்சயம் வேண்டும்.
அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...
கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..
20 வயது வரை நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை
20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை
40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை
60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.
அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது?
மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.
இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி... குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..
உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் இன்ப,துன்பங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான்.அவனுடைய அறுபதாவது வாழ்வில் மீண்டும் ஒரு புதுப்பிறவி எடுக்கிறான்.
அதாவது இளமையில் திருமணம் செய்து குடும்பத்தை கவனித்து,பிள்ளகளை ஆளாக்கி வளர்த்து,நல்ல வாழ்வை அமைத்துகொடுத்து இல்லற கடமையை முடிக்கிறான்.
இதற்கு பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுவித்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

அறுபதிலும் எண்பதிலும் என்ன விசேஷங்க?
அசிந்தயா வ்யக்தரூபாய நிர்குணாய குணாத்மனே |
ஸமஸ்த ஜகதாரமூர்தயே ப்ரம்ஹணே நம: ||
கர்பூர கௌரம் கருணாவதாரம் ஸம்ஸாரஸாரம் புஜகேந்த்ர ஹாரம் |
ஸதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே பவம் பவானீஸஹிதம் நமாமி ||
யத்ரைவ யத்ரைவ மனோ மதீயம் தத்ரைவ தத்ரைவ தவ ஸ்வரூபம் |
யத்ரைவ யத்ரைவ ஸிரோ மதீயயம் தத்ரைவ தத்ரைவ பதத்யம்தே ||
ஸாக்ஷாத் ஸர்வேச்வரனான பரப்ரம்ஹத்தின் லீலையினால் தோன்றிய ஜகத் ஸ்ருஷ்டியில் எண்ணற்ற ஜீவராசிகள் இப்பூமண்டலத்தில் வாழ்ந்து வருகின்றன. இவற்றுள் கிடைத்தற்கரிய விவேகமுள்ள மனிதப் பிறவியில்தான் வேத, சாஸ்த்ரங்களில் சரியாக விதிக்கப்பட்ட தர்மங்களையும் கர்மாக்களையும் அனுஷ்டிக்க முடியும். விவேகம் என்னும் பகுத்தறிவின் மூலம் மனிதன் தன் வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்து கொள்ள வேண்டும். ச்ருதி, ஸ்ம்ருதிகள் கூறும் ஸ¨க்ஷ்மமான (நுட்பமான) தர்மங்களையும் தத்வங்களையும் கதைகள் மூலம் எளிதாக்கித் தருகின்றன இதிகாச, புராண காவியங்கள்.
உபநயனம் ஆகிய ப்ரம்ஹசாரிக்கு சில நியமங்கள், தர்மங்கள்; விவாஹம் ஆகிய க்ருஹஸ்தனுக்கு பற்பல தர்மங்கள், கர்மாக்கள்; மேலும் அநேக புண்ய காலங்களில் செய்ய வேண்டிய தர்மங்கள்; ஆகியன காலத்தைக் குறிப்பிட்டே தர்மங்கள் விதிக்கப் பட்டிருப்பதால் இத்தகைய தர்மங்களை அனுஷ்டிக்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வேண்டும். மனிதனுக்கு ஆயுள் (வயது) 100 ஆண்டுகள் என வேதம் வாழ்த்துகிறது.
“சதாயுர்வை புருஷ: |
சத ஸம்வத்ஸரம் தீர்கமாயு: |”
ஜோதிஷ சாஸ்த்ரமோ மனிதனின் பூர்ணாயுள் 120 வருஷங்கள் எனக் கணக்கிட்டுள்ளது. நவக்ரஹ நாயகர்கள் பின்வரும் காலக்ரமப்படி மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கின்றனர். கேது=7, சுக்கிரன்=20, சூரியன்=6, சந்திரன்=10, செவ்வாய்=7, ராகு=18, குரு=16, சனி=19, புதன்=17 ஆக மொத்தம் 120 வருஷங்கள்.
சாந்திகள் ஏன்?
ஒரு குழந்தைக்கு பிறந்தது முதல் 4வருஷம் மாதாவின் பாபத்தாலும் அடுத்த 4வருஷம் பிதாவின் பாபத்தாலும் பின் 4வருஷம் தன் பாபத்தாலும் அரிஷ்டம் ஏற்படுகிறது. பிறந்தது முதல் 8 வயது வரை பாலாரிஷ்டம். பிறகு 20 வயது வரை யோகாரிஷ்டம். இவ்வாறு பல அரிஷ்டங்கள் ஜோதிஷ சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றால் ஆயுர்பாவத்துக்கு குறைவு ஏற்படுகிறது. மேலும் நாம் முற்பிறவியில் செய்த புண்யம் (நன்மை) பாபம் (தீமை) ஆகியவற்றுக்கேற்ப இப்பிறவியில் அவ்வினைப் பயன்களான சுக துக்கங்களை அனுபவிக்க நேரிடுகிறது. சுகத்தை அனுபவிப்பதால் புண்யகர்மாவும், துக்கத்தை அனுபவிப்பதால் பாவகர்மாவும் நசிகின்றன. இப்பிறவியில் செய்யும் பாபங்களின் (தீய எண்ணம், சொல், செயல்) பயனாக நமக்குப் பல துன்பங்கள் வருகின்றன.
பொதுவாக நம் ஆயுளின் பின்பகுதியில் (அதாவது 50 வயதுக்குப்பின்) முதுமை தொடங்கி உடல் நலம் குன்றிப் பல நோய்கள் தாக்கி ஆயுட்காலம் குறைகிறது. இக்குறைகள் நீங்கி நலமாக வாழ வைத்யமுறைகள் தவிர வைதிக கர்மாக்களும் தேவை.
“ஜன்மாந்தர க்ருதம் பாபம் வ்யாதிரூபேண பாததே |
தத் சாந்தி: ஒளஷதை: தானை: ஜபஹோம ஸ§ரார்சனை: ||
அதாவது முற்பிறவியில் செய்த பாபம் நோய் வடிவில் துன்புறுத்துகிறது. இது மருந்து, தானம், ஜபம், ஹோமம், தேவதா ஆராதனம் ஆகியவற்றால் நீங்குகிறது. பாரா ச்ருதி, ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட கர்மானுஷ்டானங்களின் செய்முறைகளை ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், காத்யாயனர், விகனஸர் போன்ற பல மஹரிஷிகள் சூத்ரங்களாக அருளிச் செய்தனர். பின்னர் பல மஹான்கள் அவற்றை நடைமுறையில் தெளிவாகக் கையாளப் பல கல்ப ப்ரயோக க்ரந்தங்களையும் வ்யாக்யானங்களையும் தந்துள்ளனர். இந்நூல்களில் நித்ய, நைமித்திக கர்மாக்கள் தவிர, காம்ய, சாந்தி, பௌஷ்டிக, ப்ராயச்சித்த கர்மாக்களும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பாபங்களுக்குத் தக்கபடி மந்த்ரஜபம், க்ருச்ரம் (உபவாசம்) ஸ்நானம், தானம், ஹோமம், சாந்தி போன்றவை மஹார்ணவம் (கர்ம விபாகம்), சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் முதலிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. நோயாளி தக்க மருந்து அருந்தியும், உரிய சாந்திகள் செய்தும் குணமடைகிறான். மேலும் வலிமை பெற புஷ்டி தரும் டானிக் உள்ளது போல் பௌஷ்டிக கர்மாக்களும் உள்ளன. இந்த சாந்திகளால் நீண்ட ஆயுளும், உடல் நலமும், மனநிம்மதியும், அனைத்து வளங்களும் கிடைக்கும். இன்னல்கள் முற்றிலும் நீங்காவிடினும் பெரும்பாலும் குறையும். சாந்திகளால் மனச்சாந்தி கிட்டும்.
சாந்திகள் பலவிதம்:
அநேக சாந்திகள் ஜன்ம நக்ஷத்ரத்தையே பிரதானமாகக் கொண்டு செய்யப்படுகின்றன. பிறந்த குழந்தைக்கு ஓர் ஆண்டு நிறையும் ஜன்ம மாஸ ஜன்ம நக்ஷத்திர நாளில் செய்யும் ஆயுஷ்ய ஹோமத்துடன் கூடிய சாந்தி அப்த பூர்த்தி. பின்னர் ஒவ்வொரு வார்ஷீக ஜன்ம நக்ஷத்ரம் தோறும் ஆயுஷ்ய ஹோமம், நக்ஷத்ர ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஆகிய ஏதாவதொன்று செய்வது நம் மூதாதையரின் வழக்கமாக இருந்து வந்தது. மாதந்தோறும் ஒவ்வொரு ஜன்ம நக்ஷத்ரம் அரிஷ்டகாலம் என்று கூறப்பட்டுள்ளதால், சில சுப காரியங்களை ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்யக்கூடாது என்று விலக்கப்பட்டிருக்கிறது. இது போல் ஜன்ம மாதமும் ஜன்ம வருஷமும் அரிஷ்ட காலம். பிரதி மாதம், பிரதி வருஷம் ஜன்ம வருஷம் ஜன்ம நக்ஷத்ரத்தில் நிவர்த்திக்காக சாந்தி செய்ய முடியாவிட்டாலும் கீழ்க்காணும் சில குறிப்பிட்ட சாந்திகளையாவது செய்து கொள்வது நல்லது.
சாந்திகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். 1.பீம சாந்தி= 55ஆவது வயது ஆரம்பம். 2.உக்ரரத சாந்தி= 60ஆவது வயது ஆரம்பம், 3.ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி= 61ஆவது வயது ஆரம்பம். 4.பீமரத சாந்தி= 70ஆவது வயது ஆரம்பம். 5.ரத சாந்தி= 72ஆவது வயது ஆரம்பம். 6.விஜய சாந்தி= 78ஆவது வயது ஆரம்பம். 7.சதாபிஷேகம்= 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில். 8.ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்)= பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால். 9.ம்ருத்யுஞ்ஜய சாந்தி= 85ஆவது முதல் 90க்குள். 10.பூர்ணாபிஷேகம்= 100ஆவது வயதில் சுபதினத்தில்.
இவற்றில் ஷஷ்டிதமாப்த பூர்த்தி வைபவம், சதாபிஷேகம் ஆகிய இரண்டையும் பலரும் கொண்டாடுகின்றனர். அனைத்து கர்மாக்களிலுமே, லௌகிகத்தைக் குறைத்து, வைதிகத்துக்கு முக்கியத்துவமளித்து உரிய தக்ஷிணை, ஸம்பாவனை தானங்கள் கொடுக்க வேண்டும். வைதிக கர்மாக்களை ச்ரத்தையுடன் முறையாகச் செய்து நம் தலைமுறையினர்க்கு வழி காட்ட வேண்டும்.
ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி:
அறுபது வயதில் என்ன விசேஷம்? ஜன்ம வருஷம் என்பது பிரபவாதி 60 வருஷங்களில், தான் பிறந்த வருஷம் மீண்டும் வருவது. சான்றாக ஒருவர் ஸர்வதாரி வருஷத்தில் பிறந்தால், 60வருஷம் கழித்து அடுத்த ஸர்வதாரி வருஷம் ஜன்ம வருஷம்.
ஒரு வருஷகாலம் சென்றால் ஒரு வயது நிறையும். 60 வருஷம் (வயது) நிறைவடைவதை ஷஷ்டிதமாப்த பூர்த்தி (ஷஷ்டிதம 60ஆவது) எனப்படும். இரண்டும் ஒன்றுதான். 60 ஆண்டு முடிவுற்று 61 ஆவது ஆண்டு ஜன்ம மாதத்தில் ஜன்ம நக்ஷத்ர நாளன்று செய்வதே ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி.
“ஜன்மதினாத் ஆரப்ய ஷஷ்டதம ஸம்வத்ஸரே ஜன்ம மாஸே ஜன்ம நக்ஷத்ரே”
“ஜன்மாப்தே ஜன்ம மாஸே ச ஜன்மர்«க்ஷ வா த்ரிஜன்மஸ§”
என்றார் போதாயனர். இந்த வசனப்படி, ஜன்ம நக்ஷத்ரத்தன்று ஏதாவது அசௌகர்யத்தால் சாந்தியை நடத்த முடியாவிடில் அதிலிருந்து 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யலாம். ஜன்மானு ஜன்மம் அதாவது கேட்டை முதல் நக்ஷத்ரமானால் ரேவதி 10ஆவது நக்ஷத்ரம். ஆயில்யம் 19ஆவது நக்ஷத்ரம். இதை அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லாவிலும் கேரள தேசத்திலும் ஸெளரமான ரீதியாக ஒரு மாதத்தில் இரண்டு ஜன்ம நக்ஷத்ரங்கள் வந்தால் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் பிறந்தநாள் வைபவம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு சாஸ்த்ர ப்ரமாணமும் உள்ளது.
இவ்வாறு செய்தால் தான் முதல் நக்ஷத்ரத்தில் செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10ஆவது அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்யமுடியும். பின்னால் வரும் நக்ஷத்ரத்தில் செய்வது என்று வைத்துக் கொண்டால் அன்று செய்ய முடியாதவர்கள் அதே மாதத்தில் 10 அல்லது 19ஆவது நக்ஷத்ரத்தில் செய்ய முடியாது. ஏனெனில் அப்போது அடுத்த மாதம் வந்து விடும். பங்குனி மாதமானால் வருஷமே மாறிவிடும். எனவே ஜன்ம வருஷத்தில் ஜன்ம மாதத்தில் முதல் ஜன்ம நக்ஷத்ரத்தில் தான் சாந்தி கர்மாவைச் செய்து கொள்ளவேண்டும். சௌனகர் வசனப்படி ஸ்த்ரீகளும் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்ளலாம்.
ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என நாம் கூறினாலும் ரிஷிகள் (சௌனகர், போதாயனர்) உக்ரரத சாந்தி என்ற பெயரால் அழைக்கிறார்கள். (உக்ரரதோ ம்ருத்யு ரூபோ கர்த:- உக்ரரதம் எனில் ம்ருத்யு ரூபமான பெரும் பள்ளம் (பாழும் கிணறு)) இந்த சாந்தி செய்யும் முறை பல பிரகாரமாக பல மஹரிஷிகளால்
சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று சிறிது மாறுதல் இருந்தாலும் பொதுவாக முக்கிய கர்மாவில் மாற்றமில்லை. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸ§மாகரம் ஆகிய க்ரந்தங்களில் சௌனகோக்த ப்ரயோகம் உள்ளது. மதுரைக்கு வடக்கே சௌனகோக்த ப்ரகாரமே அனுஷ்டிக்கப்படுகிறது. திருநெல்வேலி, கன்யாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய தென் பிரதேசங்களில் பெரும்பாலும் ரோமச மஹரிஷி கூறிய பிரகாரம் நடந்து வருகிறது. ரிக்வேதிகள், ஆபஸ்தம்ப ஸ¨த்ரிகள் பலர் பல ஸாமவேதிகள், போதாயன ஸ¨த்ரிகள் எல்லாரும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். சில ஸாமவேதிகள் மட்டும் கௌதமர் கூறிய முறைப்படி நடத்தி வருகின்றனர்.
ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு).
முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக.
ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி |
தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத ||
இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார்.
எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்:
சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம்.
சாஸ்த்ரக் கணக்கு:
விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.
“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |
பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |
தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”
ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.
“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே
தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |
ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே
பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||
மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,
ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8
=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).
விஞ்ஞானக் கணக்கு:
இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.
1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.
எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.
சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.
துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.
எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!
81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.
(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)
சதாபிஷேகச் சிறப்பு:
த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ
வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||
நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன்.
தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.
வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்
மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர்.
பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ.
இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது.
சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்:
1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம்.

2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும்.
3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை.
4. விசேஷ ஸங்கல்பம்.
5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம்
6. பூர்வாங்க வைதீக கட்டங்கள்.
7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல்.
8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும்.
9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும்.

10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும்.
11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும்.

12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம்.
13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது.
உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும்.
அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும்சுவாமி தரிசனம் செய்யலம் 


14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும்.
15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும்.
16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும்.
17. தானங்கள்: தசதானங்களான கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம், வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும் இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை, காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம்.

18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது. மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக் கொண்டாட்டம்!!

19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்)
20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள்.
21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை.
22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம்
23. மங்களஹாரத்தி
24. சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும். இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க) அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்) வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு வரலாம்.


26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும்.
27. ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும் முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில் கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும். சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம், காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர கீர்த்தனை பாடலாம்.
கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்:
81 வயதில் 1000 பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப் பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார்.
சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||
ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||
ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||
சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||
நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம்
இறைவன் அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம். வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல் செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம் வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற 5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக) ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக.
ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
அனந்த கோடி நமஸ்காரங்கள்.
ரோமசர் முறையில் மத்தியில் 3 கும்பங்கள், திக்பாலக கும்பங்கள் 8 ஆக மொத்தம் 11 கும்பங்கள், மத்தி மூன்றில் நடுவில் ம்ருத்யுஞ்ஜயர், தென்புறம் ம்ருத்யு, வடபுறம் நக்ஷத்ரதேவதை. அஷ்டதிக் பாலகர்கள் வருமாறு: இந்திரன்(கிழக்கு); அக்னி (தென்கிழக்கு); யமன் (தெற்கு); நிர்ருதி (தென்மேற்கு); வருணன் (மேற்கு); வாயு (வடமேற்கு); ஸோமன் (வடக்கு); ஈசானன் (வடகிழக்கு). முதலில் விக்னேச்வர பூஜை. பின் விசேஷமாக சங்கல்பம், பூர்வாங்க வைதிக கட்டங்கள், புண்யதீர்த்தம் நிரம்பிய கும்ப ஸ்தாபனம், அந்தந்தக் கும்பங்களில் அந்தந்த தேவதைகள் த்யானம், ஆவாஹனம், ஷோடசோபசார பூஜை, உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள், ஜபம், ஹோமம், அபிஷேகம், தசதானம் பஞ்சதானம் மற்றும் இஷ்ட தானங்கள், சாஸ்த்ர சம்பந்த மில்லாவிடினும் சம்ப்ரதாயத்தில் உள்ள மாங்கல்ய தாரணம், அக்ஷதை ஆசீர்வாதம் முதலிய காரியக்ரமங்கள் முறையாகவும், ச்ரத்தையுடனும் செய்யப்பட வேண்டும். ரித்விக் ப்ராம்ஹணர்கள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து, மித்ரர்கள் செய்யவே கூடாது. ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தப்பின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும். 60வயது வரை வாழ்வது என்பது வாழ்க்கைப் பயணத்தில் பாதிவழி கடப்பது போலாகும். மீதிப்பயணத்தையும் வெற்றிகரமாகக் கடந்து பரப்ரம்ஹ லக்ஷ்யத்தை அடைய ஈச்வரனின் அனுக்ரஹத்தையும், தேவர்களின் அருளாசிகளையும் வேண்டி 60 வயது நிறைந்து 61 வயது தொடங்கும் நாளன்று ஷஷ்டிதமாப்த பூர்த்தி சாந்தி செய்துகொண்டு பாபங்கள், தோஷங்கள், கஷ்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள், மரணபயமின்மை, உடல்நலம், ஐச்வர்யம் யாவும் பெற்றுப் பல்லாண்டு வளமுடன் வாழ்வோமாக. ஏவம் ய: குருதே சாந்திம் தீர்கமாயுச்ச விந்ததி | தஸ்ய ம்ருத்யயுபயம் நாஸ்தி ஸ§கீ பவதி நாரத || இவ்வாறு பலச்ருதியுடன் ஹேமாத்ரி தன் தர்மசாஸ்த்ர நூலில் ரோமச மஹரிஷி கூறிய ஷஷ்டிதமாப்தபூர்த்தி சாந்தி விதியில் கூறி முடிக்கிறார். எண்பது வயதில் என்ன விசேஷம்? - சதாபிஷேகம்: சதாபிஷேகம் என்ற சொல் நூறு வயதில் அபிஷேகம் எனப்பொருள்படும். ஆனால் 100 வயது வரை வாழ்வது மிக அரிது என்பதால் பல ரிஷிகள் நம் மீது கருணைகூர்ந்து 1000 சந்த்ர தர்சனம் செய்தவர் (சஹஸ்ரசந்த்ர தர்சீ) ஆயிரம் பிறை கண்டவர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இங்கே சந்திர தர்சனம் என்பதை பௌர்ணமி பூர்ண சந்திரனைப் பார்ப்பது என்று கருத வேண்டும். (ஆனால் அமாவாஸ்யை கழிந்து சுக்ல த்விதியை திதியில் மூன்றாம் பிறைச் சந்திர தர்சனம் செய்வது விசேஷம். ஏனெனில் இந்த மூன்றாம் பிறையே பரமசிவனின் சிரசை அலங்கரித்து அவருக்கு சந்திரசேகரன், சந்திரமௌலி எனப்பெயர் பெற்றுத்தந்தது.) இப்போது ஒருவர் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்து கொள்வது எப்போது எந்த வயதில் என்று பார்ப்போம். சாஸ்த்ரக் கணக்கு: விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது. “அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே | பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி | தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |” ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது. “தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் | ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் || மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள், ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8 =960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்). விஞ்ஞானக் கணக்கு: இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள். எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது. சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம். துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும். எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!! 81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி) ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார். (இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!) சதாபிஷேகச் சிறப்பு: த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார். நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ | மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: || நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன், ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின், அதிதிக்கு அன்னமிடுபவன். தருணாக்னி ஹோத்ரீ: இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன். வேதாந்த வித்: வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன். சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ: 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன் மாஸோபவாஸீ: மாதத்தில் நியமப்படி உபவாசம் இருப்பவன். ஞாயிற்றுக்கிழமை, அமாவாஸ்யை பூர்ணிமைகளில் இரவிலும், இரு பக்ஷங்களிலும் சதுர்தசி, அஷ்டமி திதிகளில் பகலிலும், இரு ஏகாதசிகளில் பகலிலும் இரவிலும் உபவாசம் இருக்க வேண்டும். நாம் செய்த பாபம் நீங்க நம் உடல் உபவாச நியமத்தால் சிறிது கஷ்டப்பட வேண்டும். தர்மசாஸ்த்ரங்கள் தப்தம், ப்ராஜாபத்யம், சாந்த்ராயணம் முதலிய பலக்ருச்ர நியமங்களைச் சொல்கின்றன. சாந்த் ராயணம் என்பது சந்திரனின் வளர்வு தேய்வுடன் தொடர்புள்ள ஓர் உபவாச நியமம் அல்லது ப்ராயச்சித்தம். சந்திரகலைகள் வளரும் சுக்லபக்ஷ ப்ரதமை முதல் பௌர்ணமி வரை தினம்தோறும் ஒவ்வொரு கவளமாகக் கூட்டி உண்டும், பிறகு கலைகள் தேயும் க்ருஷ்ணபக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டும் சந்திரனை மனத்தில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமே சந்திராயணம். நம் முன்னோர் பலர் இதை அனுஷ்டித்தனர். பதிவ்ரதா: தன் ச்ரமங்களையும் பாராது கணவனுக்குப் பணிவிடை செய்யும் உத்தம ஸ்த்ரீ. இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட “ஸஹஸ்ர சந்திரதர்சி” மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது. சதாபிஷேகச் செய்முறைச் சுருக்கம்: 1. ரக்ஷ£பந்தனம்: சதாபிஷேகத்திற்கு முதல்நாள் மாலை ப்ரதோஷ வேளையில் கர்த்தாவுக்கு ப்ரதிஸரபந்தம் (ரக்ஷ£பந்தனம்) என்கிற காப்புக் கட்டுதல் செய்ய வேண்டும். அல்லது மறுநாள் காலையில் வைபவம் தொடங்குமுன் செய்யலாம். 2. அனுக்ஞை: புதிய தீக்ஷ£வஸ்த்ரம் அணிந்து கொண்டு கர்த்தா தன் பத்னியுடன் தெய்வத்தையும் பெரியவர்களையும் வணங்கி விட்டு ஸதஸ்ஸில் உள்ள வைதீக ப்ராம்ஹணர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெற்று அனுக்ஞை (அனுமதி) யுடன் சதாபிஷேக வைபவத்தைத் தொடங்க வேண்டும். 3. விக்னேச்வர பூஜை: ப்ரார்த்தனை. 4. விசேஷ ஸங்கல்பம். 5. அப்யுதயம்: புண்யாஹ வாசனம் 6. பூர்வாங்க வைதீக கட்டங்கள். 7. ஆசார்யர், ரித்விக்குகள் (ஜப ப்ராம்ஹணர்கள்) வரித்தல். 8. கும்பஸ்தாபனம்: சதாபிஷேக கர்மாவுக்கு ப்ரதான தேவதை வேதஸ்வரூபமான ப்ரம்ஹா (நடுவில்) பார்ஷத (பக்க) தேவதைகள் நால்வர்-ப்ரஜாபதி (கிழக்கில்); பரமேஷ்டி (தெற்கில்; சதுர்முகர் (மேற்கில்); ஹிரண்ய கர்பர் (வடக்கில்) குறைந்த பக்ஷம் இந்த ஐந்து தேவதைகளுக்கு 5 கும்பங்களை வைத்து ஆராதிக்க வேண்டும். இது தவிர திக்பாலகர்களுக்குத் தனியாக 8கும்பங்கள் வைக்கலாம். கும்பங்களில் புண்யதீர்த்தம் நிரப்பி; மாவிலைக் கொத்து, (குடுமித்) தேங்காய், தர்ப கூர்ச்சம் வைத்து நல்ல புது வஸ்திரம் கட்டி சந்தானம் குங்குமம் சார்த்தவும் ப்ரதான கும்பத்தில் ப்ரம்ஹ ஸ்வரூப ப்ரதிமையை வைக்கவும். 9.கும்ப பூஜை: முதலில் மண்டப பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு கும்ப தேவதைக்கும் அதற்குரிய வேதமந்த்ரம், காயத்ரீ, புராண ச்லோகம் சொல்லி த்யானம் செய்ய வேண்டும். பின்னர் ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, பிறகு ப்ரம்ஹஸ¨க்த விதானமாக ஷோடசோபசாரபூஜை செய்ய வேண்டும். ப்ரம்ஹா அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யலாம். மந்த்ரபுஷ்பம், ஸ்வர்ணபுஷ்பம், சத்ர சாமராதி ராஜோபசாரங்கள் செய்யவும். 10. ஹோமம்: ஸ்தண்டிலம் அமைத்து அதில் லௌகிகாக்னியில் ப்ரம்ஹவரணம் முதல் முகாந்தம் வரை செய்து கொண்டு ப்ரம்ஹ ஸ¨க்தத்தால், ஆயுஷ்ய ஹோமம் போல, 108 ஆவர்த்திக்குக் குறையாமல் ஸமித், ஹவிஸ், நெய்யால் ஹோமம் செய்யவேண்டும். ஜயாதி ஹோமத்துடன் பூரணமடையும். உபஸ்தானம் செய்து நமஸ்கரிக்கவும். ஹ§தசேஷ ஹவிஸ்ஸைத் தனியாக மூடி வைக்கவும். 11. கும்ப ஜபம்: ரித்விக்குகள் உரிய வேத அனுவாகங்கள், ஸ¨க்தங்கள் ஜபம் செய்ய வேண்டும். யஜமானன் ச்ரத்தையுடன் அவற்றைக் கேட்கவேண்டும். 12. கும்ப புன: பூஜை: முதலில் பூஜிக்கப்பட்ட கும்பங்களுக்கு மறுபடியும் சுருக்கமாக பூஜை செய்து, தூபம், தீபம் நைவேத்யம், கற்பூரம், ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களைச் செய்யவும். பிறகு யதாஸ்தானம், நிரீஷிதாஜ்ய தானம் செய்யலாம். 13. கும்பாபிஷேகம்: (ஸஹஸ்ரதாராபிஷேகம்) ஸஹஸ்ர தாரா என்பது குழிந்து பரந்த வெள்ளி அல்லது தாமிரத் தாம்பாளத்தில் ஒரே சீராக 1000 வட்டத் துளைகள் பத்ம வடிவில் போடப்பட்டிருக்கும். இந்த 1000 துளைகள் 1000 பூர்ண சந்திரர்களை நினைவூட்டுகிறதோ! ரித்விக்குகள் தான் அபிஷேகம் செய்யவேண்டும். பந்து மித்ரர்கள் செய்யவே கூடாது. உறவினர்கள் இத்தட்டை சதாபிஷேக தம்பதியர் தலைமேல் சிறிது உயரே பிடித்துக் கொள்ள வேண்டும். தட்டில் ஸ்வர்ணம் ஏதாவது வைக்க வேண்டும். கும்பதீர்த்த ப்ரோக்ஷணம் செய்தபின், ஆசார்யன் பிரதான ப்ரம்ஹ கும்பத்திலுள்ள பாதி தீர்த்தத்தை, சிறிது சிறிதாக, யாஸ§கந்தா, யாஊர்ஜம் யாஸாம் நிஷ்க்ரமணே..., யாஸாம் இமே த்ரயோ... என்ற நான்கு மந்த்ரங்களால் ஒவ்வொரு மந்த்ர முடிவிலும் தட்டில் விடவேண்டும். பின்னர் “யா: ப்ராசீ ரேவதீ...” என்ற மந்த்ரம் சொல்லி ப்ரஜாபதி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாதக்ஷிணா...” என்ற மந்த்ரத்தால் பரமேஷ்டி கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து “யாப்ரதிசீ...” என்ற மந்த்ரத்தால் சதுர்முக கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். அடுத்து, “யா உதீசீ...” என்ற மந்த்ரத்தால் ஹிரண்ய கர்ப கும்ப ஜலத்தை அதற்குரிய ரித்விக் விடவும். கடைசியாக “யா ஊர்த்வா...” என்ற மந்த்ரத்தால் ப்ரதான ப்ரம்ஹ கும்பத்தில் மீதியுள்ள ஜலம் முழுவதையும் ஆசார்யன் விடவும். கும்ப தீர்த்தங்கள் பாபம் போக்கி மங்களம் சுகம் நன்மை தரட்டும் என்பதே இந்த மந்த்ரங்களின் ஸாரம். அபிஷேக காலத்தில் சுமங்கலிகள் மங்களகானம் (கௌரீ கல்யாணம்) பாடலாம். வாத்யங்கள் முழங்கலாம். அனைவரும் “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே” என்று பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் “ஸ்ரீஹரயே நம:” என்று மூன்று முறை கூறி எல்லாரும் “ஹரி:” என ஹரிஸ்மரணம் செய்யவேண்டும். 14. சதாபிஷேகம் ஆனபின் கர்த்தா மூன்று புதிய வஸ்த்ரங்கள் தரிக்க வேண்டும். த்ருதீய வஸ்த்ரத்தை பட்டுப்பாயின் மேல் விரித்து அதில் தம்பதியர் உட்கார வேண்டும். புது யக்ஞோப வீதம் (பூணூல்) தரித்து ஆதித்யோபஸ்தானம் செய்து சூர்யதர்சனம் செய்ய வேண்டும். 15. எடுத்து வைத்த ஹ§த சேஷ ஹவிஸ்ஸை வெண்கலப் பாத்திரத்தில் போட்டு நெய்விட்டு தங்கக் காசு ஒன்றை அதில் வைத்து தட்டால் மூடி, மந்த்ரம் சொல்லித் திறந்து பார்த்துவிட்டு ஆசார்யருக்கு தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும். அபிஷேகத்தால் நனைந்த தீக்ஷ£வஸ்த்ரங்களை (வேஷ்டி, உத்தரீயம், புடைவை, ரவிக்கைத் துணியுடன்) தானம் செய்யவும். 16. ப்ரதான கும்பத்தையும் ப்ரம்ஹ ப்ரதிமையையும் வஸ்த்ரத்தையும் ஆசார்யருக்குக் கொடுக்கவும். எல்லா ரித்விக்குகளுக்கும் ஜப, ஹோம தக்ஷிணையுடன் கும்பம், வஸ்த்ரம் கொடுக்கவும். 17. தானங்கள்: தசதானங்களான கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்த்ரம், தான்யம் (நெல்), வெல்லம், வெள்ளி, உப்பு ஆகிய 10 தானங்களையாவது செய்யவேண்டும். மீதி பஞ்சதானங்களையும் இஷ்ட தானங்களையும் (தீபம், ஜலபாத்ரம், மணி, புஸ்தகம், பலகை, கம்பு, குடை, காலணி, விசிறி மற்றும் பல) ஸெளகர்யம் போல் செய்யலாம். 18. மாங்கல்ய தாரணம்: இது சாஸ்த்ர ஸம்மதமில்லை. ஸம்ப்ரதாயத்தில் உள்ளது. மாங்கல்ய பூஜை செய்தபின் பல தானம் (ஞாதிகளைத் தவிர) உறவினர்களுக்கு கொடுக்கவும். பின்னர் 81 வயது இளைஞர் (!) தன் க்ருஹிணிக்குத் தாலிகட்டி மகிழ்வார். கொள்ளுத் தாத்தாவுக்குக் கல்யாணம்! கொள்ளுப் பேரனுக்குக் கொண்டாட்டம்!! 19. அக்ஷதை ஆசீர்வாதம். (மந்த்ரம்) 20. ஸ்ரீமட ஸம்பாவனை, கிராம ஸம்பாவனை, கோவில் ப்ரஸாத மரியாதைகள். 21. ஆசார்ய ஸம்பாவனை, வித்வத் ஸம்பாவனை. 22. பவித்ர விஸர்ஜனம்-ப்ரம்ஹார்ப்பணம் 23. மங்களஹாரத்தி 24. சதாபிஷேக தம்பதி மூத்த பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசி பெற வேண்டும். இளைய உறவினர், நண்பர்கள் சதஸிஷேகத் தம்பதியை வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும். 25. தம்பதியை தக்க வாகனத்தில்-காரில் (ரதம், பல்லக்கு என எண்ணிக்கொள்க) அமரவைத்து வேத, வாத்ய கோஷத்துடன் சிறிது தூரம் ஊர்வலம் (கிராம ப்ரதக்ஷிணம்) வரச் செய்யலாம். அருகில் கோவில் இருப்பின், அதுவரை சென்று வணங்கிவிட்டு வரலாம். 26. போஜனம்: ரித்விக் ப்ராம்ஹணர்களுக்குப் போஜனம் செய்வித்தபின் உறவினர் நண்பர்களோடு உண்டு மகிழவும். 27. ஸஹஸ்ர சந்த்ரபூஜை: சதாபிஷேக தினத்தன்று ஸந்த்யா வேளையில் ஸஹஸ்ர சந்த்ர தர்சீ விசேஷமான ஒரு சந்த்ர பூஜை செய்வது பற்றி வைகானஸரின் க்ருஹ்ய ஸ¨த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாஸ தீக்ஷிதீய வ்யாக்யானத்தில் ஸஹஸ்ர சந்த்ர பூஜா மண்டலம் வரையும் முறையும் பூஜை செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளன. இம்மண்டலத்தை நான்கு கால் பகுதிகளாக ஒவ்வொரு பகுதியிலும் 250 சதுரக் கட்டங்கள் வருமாறும், நான்கு பகுதிகளைச் சுற்றி வீதி(பாதை)கள் வருமாறும் கோலப்பொடியால் போடலாம். ஆயிரம் கட்டங்களிலும் முழுநிலவைக் குறிக்கும் ஆயிரம் வட்டங்கள் வரையலாம். மண்டல மத்தியில் கலசத்தில் வெள்ளி ப்ரதிமையில் சந்திரபகவானை ஆவாஹனம் செய்யவும். சந்திரனுக்கு வலப் பக்கம் ரோஹிணீ கணத்தையும், இடப் பக்கம் அநாவ்ருஷ்டி கணத்தையும் தனித்தனி கலசங்களில் ஆவாஹனம் செய்யவும். சந்த்ரனுக்கு வெண்மலர்களால் ஷோடசோபசாரபூஜை செய்யவும். சந்திரஸஹஸ்ர நாமாவளி, அஷ்டோத்தர சதநாமாவளி அர்ச்சனை செய்யும்போது, வேதப்ராம்ஹணர்கள் ஸோமஸ¨க்தம், மந்த்ரம், காயத்ரீ போன்றவை ஜபிக்கலாம். சந்திர ஸ்தோத்ரங்கள் சொல்லலாம். சந்திர கீர்த்தனை பாடலாம். கொள்ளுத் தாத்தாவும் கொள்ளுப் பேரனும்: 81 வயதில் 1000 பிறைகண்டு சதாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யசாலிக்கு, தன் புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன் ஆகியோருடன் கொண்டாடும் பாக்யமும் நேரலாம். பிதா உ புத்ரன் உ பௌத்ரன் உ ப்ரபௌத்ரன். அதாவது தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். இத்தகைய பாக்யம் கிட்டியவருக்கென்றே சாந்தி குஸ§மாகரம், ரத்னாகரம் ஆகிய ப்ரயோக க்ரந்தங்கள் “ஸஹஸ்ர சந்திர தர்சன ப்ரபௌத்ர ஜனன சாந்தி” என்ற ஒரு விசேஷமான சாந்தி செய்யும் முறையைச் சொல்கின்றன. தன் ப்ரபௌத்ரனைப் பார்த்தவர் கனகாபிஷேகம் செய்துகொண்டு பாபங்களிலிருந்து விடுபட்டு புண்யங்கள் பலபெற்று பின்னர் ஸ்வர்கத்தையும் அடைவார் என சௌனகர் கூறுகிறார். சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: | ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே || ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: | தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: || ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் | மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் || சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி | ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி || நிறைவுரை: ப்ரம்ஹமே லக்ஷ்யம் இறைவன் அருளால் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை அடைந்த நாம் நமது ஸநாதன வைதிக தர்மத்தைப் பின்பற்றி தினமும் வேதமோதி அதில் விதிக்கப்பட்ட கர்மாக்களை நன்கு அனுஷ்டித்து அவற்றை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். கர்மானுஷ்டானத்தால் சித்த சுத்தி; சித்த சுத்தியால் வைராக்யம். வைராக்யத்தால் ஞானம்; ஞானத்தால் மோக்ஷம். அதாவது அதாகவே ஆவது. பிறகு பிறவி என்பதே கிடையாது. எனவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இனி பிறவி இல்லாமல் செய்து கொள்வதே! இதற்கு ஈஸ்வர அனுக்ரஹம் வேண்டும். மேலும் தெய்வ ஆராதனம் வேண்டும். ஆதிசங்கரபகவத் பாதர் தன் சீடர்களுக்கு அருளிய ஸோபான பஞ்சகம் என்ற 5ஸ்லோகங்களில் 40 படிகளாக அமைந்த உபதேசங்களை நாம் ஆதேசங்களாக (ஆணைகளாக) ஏற்று அதன்படி நடந்து படிப்படியாக முன்னேறி ப்ரம்ஹ ஞானத்தை எய்துவோமாக. ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.