வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

செவ்வாய், 20 அக்டோபர், 2015

தச மஹா வித்யா தேவியர்

படைக்கும் கடவுளான பிரம்மாவின் 10 புத்திரர்களுள் ஒருவன் தட்சன். அவன் ப்ரஜாபதி ஆவான். தட்சனின் மகள் சதி தேவி (தாட்சாயணி). அவளது கணவன் சிவன். தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து, விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் படி அழைப்பு விடுத்தான். 27 நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட தனது 27 புதல்வியரையும், அவர்களது கணவன் சந்திரனுக்கும் அழைப்பு விடுத்தான். சதி தேவியையும், மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. தந்தையால் அழைக்கப்படாவிட்டாலும், தந்தை நடத்தப் போகவிருக்கும் மிகப்பெரிய யாகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலிலும், சகோதரிகளைக் காண விரும்பியும், முக்கியமாகத் தனது கணவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், தேவர்கள் தங்களது மனைவியருடன் அலங்கரிக்கப்பட்ட வானவூர்தியில், பறந்து செல்வதையும் கண்டு பரவசமடைந்து, கணவன் சிவனிடம் அனுமதி கேட்டு நின்றாள்.

அழையாத விருந்தாளியாகச் சென்று தனது அன்பு மனைவி, அவமானப்படக்கூடாது என்று எண்ணியதால் சிவன் அனுமதி அளிக்கவில்லை. ஒரு சாதாரண கணவனைப் போல் ஆணாதிக்கத்துடன் அனுமதி தர மறுத்த சிவனின் மீதும், ப்ரஜாபதியாக மட்டும் நடந்து கொண்டு, தந்தை என்ற முறையில் அழைப்பு விடுக்காத தட்சன் மீதும் மிகுந்த கோபம் கொண்டு சதி தேவி, தனது சக்தியைக் (ஆதிக்கத்தையும், கோபத்தையும்) காட்ட விரும்பினாள். கண்ணுக்குத் தீட்டும் மை போன்றும், இருட்டினைப் போன்றும் கரிய நிறமுடைய காளியாகத் தோற்றமெடுத்து பயங்கரமான பற்களைக் காட்டி, இடிமுழக்கம் போல் பயங்கரமான சப்தத்துடன் சிரிக்கவும் ஆரம்பித்தாள். தனது மூன்று கண்களையும் ஒருமுறை திறந்து பார்த்த சிவன் பயத்தில் உறைந்தார்.

இரத்தம் சொட்டும் தொங்கிய நாக்கினையும், நிலைகுத்தி நிற்கும் முடியினையும், நான்கு கைகளையும், கோபமான கண்களையும், வியர்வையில் நனைந்த உடம்பினையும் கொண்ட அம்பிகையைக் கண்டு மிகவும் பயந்தார். மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாகக் கொண்டு, தலையில் பிரகாசமான கிரீடத்தையும், 10 கோடி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய பிறைநிலாவை நெற்றியில் சூடியிருந்ததையும் கண்டு இங்குமங்கும் ஓடினார். தேவியோ இடி போல் தொடர்ந்து பயங்கரமாக ஆர்ப்பரித்து சிரிக்கவே, சிவன் எல்லாத் திசைகளிலும் ஓடினார். திரும்பிய 10 திசைகளிலும், தேவியின் 10 விதமான மாறுபட்ட பயங்கரமான தோற்றத்தைக் கண்டார். இந்தப் பத்து தேவியர் தோற்றமே தச மஹா வித்யா தேவியர் தோற்றமாகும்.

சிவனுக்கு நேர் எதிரில் தேவி எடுத்த முதல் தோற்றமே காளி ஆகும். சிவனுக்கு நேர் எதிரில் காளியும், அவருக்கு மேல் தாராவும், வலது பக்கம் ஒல்லியான, சின்னமஸ்தாவும், இடது பக்கம் புவனேஸ்வரியும், பின்பக்கம் எதிரிகளை அழிப்பதில் வல்லவளான பலளாமுகியும், கீழே பைரவியும், தென்கிழக்கே விதவையும், முதியவளுமான தோற்றத்தில் தூமாவதியும், தென்மேற்கே அழகிய திரிபுரசுந்தரியும், வடமேற்கில் மாதங்கியும், வடகிழக்கில் என்றும் பதினாறான ÷ஷாடசீயும் தோற்றம் கொண்டு நின்றனர். இந்த 10 தேவியரும் தந்த்ரா சாஸ்த்திரத்தில் வழிபாட்டிற்குரிய உபாஸனா மூர்த்தங்களாவர். தேவியின் 90 கோடி தோற்றங்களில் தச மஹா வித்யா தேவியர் தோற்றமே முதன்மையானதும், புகழ் பெற்றதுமாகும். தேவியின் இந்தப் பயங்கரமான தோற்றங்களைக் கண்ட சிவன் வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, யாகத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.

தட்சன் யாகசாலையில் கூடியிருந்த அனைவரின் முன் சிவனின் மஹிமையை அறியாமல், அவரது புறத்தோற்றத்தை இழிவாகக் கூறி அவமதித்தான். கணவனின் மனப்பூர்வமான சம்மதமின்றி வந்ததோடு, தேவலோகமே கூடியிருந்த யாக சாலையில் தன்னால் தனது கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தினால் சதி மிகவும் வருந்தினாள். தட்சனால் தான் பெற்ற இந்த உடம்பை அழிக்க எண்ணி தனது யோகசக்தியினால் அக்னியை எழுப்பி, அதில் புகுந்து தனது உயிரை மாய்த்தாள்.

நந்தி தேவனால் இதைக் கேள்வியுற்ற சிவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவித்து தட்சன் யாகத்தை அழிக்கச் செய்தார். அவரும் யாகசாலை வந்து, நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்ட தனது அன்பு மனைவியின் உடலைப் பிரிய மனமில்லாமல் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். சிவனின் கோபத்தினால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து இவ்வுலகினைக் காக்க, விஷ்ணு, சிவனிடமிருந்து தான் பெற்ற சுதர்சனசக்ரம் என்ற சக்ராயுதத்தால், அம்பிகையின் உடலை 51 துண்டுகளாகத் துண்டித்து அவை பூமியில் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலுள்ள முக்கியமான 51 இடங்களில் விழச் செய்தார்.

தேவியின் அங்கங்கள் விழுந்த 51 இடங்களும், சக்தி வாய்ந்த பீடங்களாகவும், புண்ணிய ÷க்ஷத்திர ஸ்தலங்களுமாயின. பைரவரின் காவலுடன் அம்பிகையின் கோயில்கள் 51 சக்தி பீடங்களில் தோன்றி, தேவியின் வழிபாட்டின் மூலம், சதியின் நினைவு நிலை பெற்றது.

தச மஹா வித்யா தேவியர் தோற்றத்தில் ஆரம்பமாகிய தட்சன் யாகம், 51 சக்தி பீடங்கள் தோன்றக் காரணமானதில் முடிவடைந்தது. இந்த தச மஹா வித்யா தோற்றம் மிகவும் பழமையானதாகும். மஹா விஷ்ணு தசாவதாரம் எடுத்த போது தசாவதார காரியங்கள் நிறைவேற உதவியர்கள் தச மஹா வித்யைகளே.

காளி - கிருஷ்ண அவதாரம்
தாரா - ராம அவதாரம்
÷ஷாடசீ - கல்கி அவதாரம்
புவனேஸ்வரி - வராஹ அவதாரம்
திரிபுரபைரவி - நரஸிம்ம அவதாரம்
சின்னமஸ்தா - பரசுராம அவதாரம்
தூமாவதி - வாமன அவதாரம்
பகளாமுகி - கூர்ம அவதாரம்
மாதங்கி - பலராம அவதாரம்
கமலா - மச்ச அவதாரம்

என்று அந்தந்த அவதாரங்களுக்கு உரிய சக்தியை வழங்கியவர் தச மஹா தேவியர்களாவர் என்று முண்டமாலா தந்திரம் கூறுகிறது. இவர்களில் காளி, புவனேஸ்வரி, ÷ஷாடசீ, கமலா, மாதங்கி ஆகியோர் வழிபாடு மட்டுமே இன்றளவும் பின்பற்றப்படுகிறது. தாரா தேவி புத்தமதத்தினரின் வழிபாட்டுத் தெய்வமாகக் கருதப்படுகிறார். தூமாவதி, சின்னமஸ்தா, பகளாமுகி, பைரவி ஆகியோர் வழிபாட்டு முறைகள் மிகவும் கடினமானபடியால், இப்போது அதிகம் வழக்கத்தில் இல்லை. உண்மையான பக்தியுடன் தச மஹா வித்யா தேவியரை வழிபடும் சாதகர்கள், உயர்ந்த ஞானத்தையும், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்.

அதற்கும் மேலாக, மாயா ஜாலம் போன்ற மாரணம், உச்சாடனம், ÷க்ஷõபனம், மோஹனம், த்ராவனம், ஸ்தம்பனம், வித்வேஷனம் என்ற மஹாசக்திகளையும் அடைவர். தச மஹா வித்யா தேவியர் ஒவ்வொருவருக்கும், அஸ்ஸாமில் காமாக்யா என்னுமிடத்தில் தனித்தனியே கோயில்கள் உள்ளன. எனவே சக்தியை வழிபடும் சாக்தர்களுக்கு காமாக்யா ஒரு மிகச் சிறந்த புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.
"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'
தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா.
தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.
1. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.
2. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.
3. சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.
4. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.
5 கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழவலம் வரும் நாயகி கமலாத்மிகா.
6. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.
7. திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

8. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும்கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.
9. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

10. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்குஉரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாட படுவதாகசொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ரசாஸ்திரத்தில் ஒன்று போலவும் தேவிமஹாத்மியத் தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக