வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

புதன், 15 ஆகஸ்ட், 2012

இந்துக்களின்கடமைகள்:


இந்துக்களின் தினசரிக் கடமைகள்:
1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.
2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.
4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.
5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.
6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும். 
உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன.
இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் - தேவர்கடனும்  பிதுர் கடனும்.
நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார், ஸர்வேசுவரன்?
நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்றன
பொதுவான கடமைகள்
1. வாரத்துக்கு ஒரு நாளேனும், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
2. தியானம் பழக வேண்டும்.
3. பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.
4. துறவிகள், ஞானிகள், மாடாதிபதிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
5. வீட்டில், நாம சங்கீர்த்தனம், சிறப்பு வழிபாடு போன்றவற்றை, அண்டை அயலார்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்த வேண்டும்.
6. வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.
7. இந்து தர்ம பிரசார இயக்கங்கள் பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிக்கவும்.
8. புராண, இதிஹாஸ, தேவார, திவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.
9. இந்து பண்டிகைகளை, வெறும் விழாக்களாகக் கருதாமல் தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.
10. அருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண் பார்வையற்றோர், செவிகேளாதோர் சேவை இல்லங்களுடன் தொடர்பு கொண்டு, இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
11. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணிவிடை செய்தல் வேண்டும்.
12. வீட்டில், தரக்குறைவான சினிமாப் பாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக் கூடாது. பாலுணர்வு, வன்முறை, பழிக்குப்பழி, பேராசை ஆகிய தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் - புத்தகங்களை வாங்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக