அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்
1. ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்
3. ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
தியான சுலோகம்:-
6. ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம் இந்த தேவியானவள் சிம்மாசனத்தில்
எட்டு கைகளுடன் அமர்ந்து, அந்தக் கரங்களில் கத்தி, பாடக்கயிறு, சக்கரம், அபயம், கேடயம்,
அங்குசம், சங்கம், வரதம் இவைகளுடன் காட்சி தருகின்றாள். அருகில் அன்னப்பறவையும் காணப்படுகிறது.
எல்லாவித அலங்கார, தோரணைகளுடன் தலையில் கிரீடமணிந்து காட்சி தருகிறாள்.
தியான சுலோகம்:-
7. ஸ்ரீ வீரலட்சுமி ஸ்தோத்திரம்
ஸ்ரீ வீரலட்சுமி தனது எட்டுக்கைகளிலும் அபயம், சக்கரம், சூலம், பாணம், வரதம், சங்கு, வில், கபாலம் ஏந்தி வெற்றி மாலையுடன் காட்சி தருகின்றாள்.
தியான சுலோகம்:-
- 8. ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம் தனது நான்கு கைகளிலும்
அபயவரத முத்திரைகளுடன் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். இரண்டு யானைகளும் வழிபட்டு
நிற்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு, இந்த நான்கையும் தனது கைகளாக் கொண்டு ஸ்ரீ
மஹாலட்சுமி தேவி காட்சி தருகின்றாள்.
1. ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்
ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை
பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத
முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி இரு
யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய பெண்களும் இருக்க,
வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள்.
தியான
சுலோகம்:-
சதுர்ப் புஜாம்
த்விநேத்ராஞ்ச
வராபய கராந் விதாம் அப்ஜத்வய கராம்போஜாம் அம்புஜாசநஸமஸ்த்திதாம் ஸஸிவர்ண கடேபாப் யாம் ப்லாவ்யமானாம் மஹாச்ரியம் சர்வாபரண சோபாட்யாம் சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம் சாமரக்ரஹ நாரீபி : ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ : ஆபாதலம்பி வசநாம் கரண்ட மகுடாம் பஜே. |
2. ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
இந்த தேவியானவள் அபயவரத முத்திரைகளுடன் தாமரைப் பூவில் அமர்ந்து, மலர்த்தோரணங்களால் சூழப் பட்டவள். பேரழகுடன் மஞ்சள் பட்டு அணிந்து அழகொளிரும் கிரீடம் சூடியவள். தன் இரு புறத்திலும் தீப சக்திகளைக் கொண்டவள் ஸ்ரீ ஆதிலட்சுமி இத்தகைய தன்மையுடன் விளங்கி எல்லா உயிர்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த தேவியானவள் அபயவரத முத்திரைகளுடன் தாமரைப் பூவில் அமர்ந்து, மலர்த்தோரணங்களால் சூழப் பட்டவள். பேரழகுடன் மஞ்சள் பட்டு அணிந்து அழகொளிரும் கிரீடம் சூடியவள். தன் இரு புறத்திலும் தீப சக்திகளைக் கொண்டவள் ஸ்ரீ ஆதிலட்சுமி இத்தகைய தன்மையுடன் விளங்கி எல்லா உயிர்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச
சாபயாம் வரதாந்விதாம் புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன சம்ஸ்த்திதாம் புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல மண்டிதாம் சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம் ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர் தீபசக்திகாம் செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே. |
3. ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
ஸ்ரீ சந்தானலட்சுமி தேவி
தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன்
உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள்.
தியான சுலோகம்:-
தியான சுலோகம்:-
ஜடாமகுட
சம்யுக்தாம்
ஸ்த்தி தாசந சமந்விதாம் அபயம் கடகஞ் சைவ பூர்ணகும்பம் புஜத்வயே கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச மெளக்திகம் சாபிதாரீணீம் தீபசாமர நாரீபி:சேவிதாம் பார்ச்வ யோர்த்வயோ பாலே சேநாநி சங்காசே கருணாபூரி தாநநாம் மஹாராஞ் ஞீஞ்ச சந்தான லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே |
4. ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
இந்த
தேவியானவள் சகல அணிமணிகளும் அணிந்து சுகாசனத்தில் உட்கார்ந்து, ஒளிரும் பேரழகுடன்,
தனது எட்டு கைகளிலும் சட்டரம், அம்பு, நிறைகுடம், வெற்றிலை, சங்கு, தாமரை, வில் ஆகிய
இவைகளை ஏந்தி அடியார்களுக்கு அருளை வழங்குகிறாள்
கிரீட மகுடோ பேதாம்
ஸ்வர்ண வர்ண சமந்விதாம் சர்வாபரண சம்யுக்தாம் சுகாசந சமந்விதாம் பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச தக்ஷிணேன கரேணது சக்ரம் பாணஞ்ச தாம்பூலம் ததா வாம கரேணது சங்கம் பத்வஞ்ச சாபஞ்ச கண்டி காமபி தாரிணீம் சத்கஞ்சுக ஸ்தநீம் த்யாயேத் தன லக்ஷ்மீம் மநோஹரம். |
- 5. ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம்
ஸ்ரீ தான்யலட்சுமி தலையில்
ஒளிபொருந்திய கிரீடம் அணிந்து, கைகளில் செந்தாமரை, கரும்பு தாங்கி சுகாசனத்தில் அமர்ந்த
நிலையில் இருக்கின்றாள். எல்லாவிதமான அலங்காரங்களும் இவளிடத்தில் ஜொலிக்கின்றன.
தியான சுலோகம்:-
வரதாபய
சம்யுக்தாம்
கிரீட மகுடோஜ்வலாம் அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச கதலீ பலத்ரோணிகாம் பங்கஜம் தக்ஷவாமேது ததாநாம் சுக்லரூபிணீம் க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம் சுகாசந சமந்விதாம் சர்வாலங்கார சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் மதமத்தாம் மநோஹரி ரூபாம் தான்யட்ரீயம் பஜே |
6. ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம்
தியான சுலோகம்:-
அஷ்ட
பாஹீயுதாம்தே வீம்
ஸிம்ஹாசன வரஸ்த்திதாம் சுகாஸநாம் சுகேசீம்ச கிரீட மகுடோஜ்வலாம் ச்யாமாங்கீம் கோமளாகாரம் சர்வாபரண பூஷிதாம் கட்கம் பாசம் ததா சக்ரம் அபயம் சவ்ய ஹஸ்தகே கேடகஞ் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே ராஜரூபதராம் சக்திம் ப்ரபா செளந்தர்ய சோபிதாம் ஹம்சாரூடாம் ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே |
7. ஸ்ரீ வீரலட்சுமி ஸ்தோத்திரம்
ஸ்ரீ வீரலட்சுமி தனது எட்டுக்கைகளிலும் அபயம், சக்கரம், சூலம், பாணம், வரதம், சங்கு, வில், கபாலம் ஏந்தி வெற்றி மாலையுடன் காட்சி தருகின்றாள்.
தியான சுலோகம்:-
அஷ்டபாஹியுதாம்
லக்ஷ்மீம்
ஸிம்ஹாசந வரஸ்த்திதாம் தப்த காஞ்சந சங்காசாம் கிரீட மகுடோஜ் வலாம் ஸ்வர்ண கஞ்சுக சம்யுக்தாம் ச்சன்ன வீரதராம் ததா அபயம் வரதஞ் சைவ புஜயோ:சவ்ய வாமயோ: சக்ரம் சூலஞ்சபாணஞ் ச சங்கம் சாபம் கபாலம் தததீம் வீரலக்ஷ்மீஞ் ச நவதாலாத் மிகாம் பஜே. |
- 8. ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம்
சதுர்புஜாம்
மஹாலக்ஷ்மீம்
கஜயுக்ம சுபூஜிதாம் பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம் ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ர காம் பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம். |
அஷ்டலட்சுமி வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் ஏதோ ஒரு நாள் பண்டிகையாக
நினைக்காமல், தனது வாழ்வின் அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு நிறுத்திவிடாமல், நேரம் கிடைக்கும் போது அல்லது வசதிப்படும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது தின்னம்
அடுத்த பதிவில் சந்திப்போம்,நன்றி.அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு நிறுத்திவிடாமல், நேரம் கிடைக்கும் போது அல்லது வசதிப்படும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது தின்னம்
அஷ்டலட்சுமி பற்றிய சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்கு