வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

புதன், 15 ஆகஸ்ட், 2012

இந்துக்களின்கடமைகள்:


இந்துக்களின் தினசரிக் கடமைகள்:
1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.
2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.
4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.
5. சமய நூல்களை படித்தல் வேண்டும்.
6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும். 
உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன.
இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் - தேவர்கடனும்  பிதுர் கடனும்.
நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார், ஸர்வேசுவரன்?
நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்றன
பொதுவான கடமைகள்
1. வாரத்துக்கு ஒரு நாளேனும், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
2. தியானம் பழக வேண்டும்.
3. பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமயப் பேருரை நிகச்சிகளுக்குச் செல்ல வேண்டும்.
4. துறவிகள், ஞானிகள், மாடாதிபதிகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
5. வீட்டில், நாம சங்கீர்த்தனம், சிறப்பு வழிபாடு போன்றவற்றை, அண்டை அயலார்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்த வேண்டும்.
6. வீட்டில் ஓம் படம் மாட்டி வைக்கவும்.
7. இந்து தர்ம பிரசார இயக்கங்கள் பத்திரிகைகளுக்கு ஆதரவு அளிக்கவும்.
8. புராண, இதிஹாஸ, தேவார, திவ்யபிரபந்த நூல்கள் கட்டாயமாக ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டும்.
9. இந்து பண்டிகைகளை, வெறும் விழாக்களாகக் கருதாமல் தெய்வங்களோடு ஒட்டுறவு கொள்ளும் தருணங்களாக மதித்துக் கொண்டாட வேண்டும்.
10. அருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண் பார்வையற்றோர், செவிகேளாதோர் சேவை இல்லங்களுடன் தொடர்பு கொண்டு, இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.
11. பெற்றோர்களைத் தெய்வமாகப் போற்றிப் பணிந்து பணிவிடை செய்தல் வேண்டும்.
12. வீட்டில், தரக்குறைவான சினிமாப் பாடல்கள் ஒலிக்க அனுமதிக்கக் கூடாது. பாலுணர்வு, வன்முறை, பழிக்குப்பழி, பேராசை ஆகிய தீய உணர்வுகளைப் பாராட்டும் புதினங்கள் - புத்தகங்களை வாங்கக் கூடாது.

பஞ்சாங்ககுறிப்புக்கள் :


பஞ்சாங்கம் சொல்லும் சில பொதுவான குறிப்புக்கள் : 
                                                                                                                                              
1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)
2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
3. விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.
5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.
6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
8. துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.
14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.
19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.
25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா
26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கணகதாரா ஸ்தோத்திரம்

கனகதாரா ஸ்தொத்திரம் பிறந்தவறலாறு                                                                       முன்பொருகாலத்தில் இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர் துறவு நெரிக்கேற்ப்ப நாள்தோறும் இறை வழிபாடு முடிந்த பின்னர் பிச்சை ஏற்க்கபுரப்படுவார் அவ்வாறு அருநாள் செல்லும்போது வழியில் உள்ள சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்க்கு சென்று ''பவதி பிக்ஷாந்தேகி" எனஅழைக்கழானார் சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை அவருடைய மனைவி தருவசீலை மட்டும் அங்கிருந்தார்.பாலகனான சங்கரரைப் பார்த்தவுடன் மனம் உழழ ஆரம்பித்தது ஆனால் பிச்சைஇட அவைடத்தில் பொருள் ஏதும் இல்லை. வீட்டில் ஏதும் இல்லாததால் மிகவும் வருத்ததுடன் சங்கரரைப் பார்த்து ''நான் பாவம் செய்தவள் பகவானே வந்திருக்கும் பொழுது இட ஏதும் இல்லை என இறைஞ்சினார் ஆனால் சங்கரரோ அன்னயே அடியேனுக்கு கொடுக்க ஏதும் இல்லையே என கலங்க வேன்டாம் உனவு இல்லாவிட்டாலும் உண்ணக்கூடிய பொருளெதுவாயினும் கொடுங்கள் என் கூறினார் உடனே தன் வீட்டிற்க்குள் சென்று பார்த்த அம்மையார் பலநாட்களுக்கு முன் செய்திருந்த நெல்லிக்காய் ஊறுகாய் ஒன்று மீதமிருப்பதுகன்டு அதை எடுத்து வந்து மனதயக்கதுடன் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டார் இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர்  அன்னையே அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்கனியைவிட இந்த உல்கத்தில் சிறந்த பொருள் எதுவும் கிடையாது. அதிதியான எனக்கு அளித்த இந்த பொருளால் உங்களைப் பிடித்திருந்த வருமை இன்றோடு அழிந்து விட்டது என்க்கூறி செல்வத்திற்க்கு அதிதேவதையான ஸ்ரீ மகாலட்சுமி தேவியை மனதால் நினைத்து இந்த கனகதாரா ஸ்தொத்திரத்தை பாடி வழிபட்டார். உடனே தேவி சங்கரரின் முன் தோன்றி நெல்லிக்கனியை பிச்சையாக இட்ட கரனத்தினால் தேவி மனமுருகி அந்த இல்லத்தின்மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபொல்பொழிந்தார். அது மட்டுமில்லாமல் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயனம் செய்யும் அனை வருக்கும் தேவியின் அருள் பரிபூரனமாக கிடைக்கும் என்க்கூறினார். எனவே நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் பாராயனம் செய்து ஸ்ரீமகாலட்சுமியின் பரிபூரண அருள்கிடைக்கவேண்டுகிறோம்.                                                                                         ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்:-
அங்கம் ஹரே:புனகபூஷன
      மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
      தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
      ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
      மங்கல தேவதாயா:
1


மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.
 
முக்தா முஹீர்விதததீ
      வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
      கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ
      மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது
      ஸாகர ஸம்பவாயா:
2


ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.
 
ஆமீலிதாட்ச மதிகம்ய
      முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ
      மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக
      பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம
      பூஜங்க சயாங்கனாயா
3


ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.
 
பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
      கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி
      விபாதி
காமப்ரதா பகவதோபி
      கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே
      கமலாலயாயா:
4


மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதோரஸி 
      கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா
      தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
      மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது
      பார்கவநந்தனாயா:
5





மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.
 
ப்ராப்தம் பதம் ப்ரதமத:
      கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி
      மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
      மந்தாலஸம் சமகராலய கன்யகாயா:
6


ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.
 
விச்வாம ரேந்த்ர பதவீ
      ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்
      முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
      மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர
      மிந்திராயா
7


அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.
 
இஷ்டா விசிஷ்ட மதயோபி
      யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப
      பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
      திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட
      மம புஷ்கர விஷ்டராயா
8


எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.
 
தத்யாத் தயானுபவனோ
      த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
      சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய
      சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ
      நயனாம் புவாஹ:
9


எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.
 
கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
      சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
      மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக
      குரோஸ்தருண்யை!
10


திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.
 
ஸ்ருத்யை நமோஸ்து
      சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய
      குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து
      சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து
      புருஷோத்தம வல்லபாயை
11


நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.
 
நமோஸ்து நாலீக நிபானனாயை
      நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
      நமோஸ்து நாராயண வல்லபாயை:
12


பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.
 
நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
      நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
      நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை:
13


முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
 
நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
      நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
      நமோஸ்து தாமோதர வல்லபாயை
14


சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.
 
நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
      நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
      நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை:
15


சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.
 
ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
      நந்தனானி
ஸாம்ராஜ்யதான
      விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா
      ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்
      கலயந்து மான்யே
16


எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.
 
யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
      ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
      த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே:
17


தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.
 
ஸரஸிஜ நிலயே ஸரோஜ
      ஹஸ்தே
தவல தராம்சுக
      கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே
      மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி
      ப்ரஸீத மஹ்யம்
18


சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
 
திக்தஸ்திபி கனக கும்ப
      முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு
      ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்
      ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்
      அம்ருதாப்தி புத்ரீம்
19


பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
 
கமலே கமலாட்ச வல்லபேத்வம்
      கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
      ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா
20


எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.
 
ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
      த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
      பவந்தி தே புவி புத பாவிதாசயா
21


மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.