வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

திங்கள், 23 ஜூலை, 2012

கும்பாபிஷேக விளக்கங்கள்

கும்பாபிஷேகத்தைப்பற்றிய முழுமையான விளக்கங்கள் இதுமுந்தைய பதிவின் தொடற்சி1.பிம்ப ஸொதநம்: பிம்ப சொதநம் என்பது தரமாந சேத மில்லாத  எந்த குரையுமிள்லாத விஹ்ரகங்களை  தேர்ந்தெடுப்பது ஆகும்.2.ஜலாதிவாஸம்: ஜலாதிவஸம் என்பது நாம் தேர்ந்தெடுத்த சிறந்த விஹ்ரகங்களை குறிப்பிட்ட மாதங்களுக்கு நீரில் அதாவது ஜலத்தில் வைத்திருப்பது ஆகும். இந்தநீரில் சில பொருட்களை சேர்க்கவேன்டும் முதலில் சுத்தமாந நீர் அடுத்ததாக விஷேஷ திரவியங்கள் மற்றும் வாஸநாதி பொருட்கள் சேர்க்கப்படவேன்டும். இந்த சேர்க்கையானது. 3.தாந்யாதி வாஸம்: இதில் நாம் தேர்ந்தெடுத்த விஹ்ரகத்தை சிறிது காலம் தாந்யத்தில் அதாவது நெல் போன்ற தாந்யத்தில் வைத்திருப்பது ஆகும்.4.கிராம பிரதக்க்ஷினம்:இதில் நாம் கும்பாபிஷேகத்திர்க்கு முதல்நாள் விஷேஷபூஜைகள் செய்து கிராமத்தை வலம் வருதல் ஆகும்.5.நயநோந் மீலநம்: இது விஹ்ரஹகமானது செய்த இடத்திலிருந்து ஆலயத்திற்க்கு வந்தவுடன் கண்திறப்பது(நயநம்-கண்,மீலநம்-திறந்தல்) 6.தச தர்சநம்:அதாவது கண் திறந்தவுடன் பத்து வகையான உபசாரங்கள் சுவாமிக்கு செய்விப்பது(1பூர்ணகும்பம்2.தீபம்3.தர்ப்பநம்(கன்ணாடி)4.கொ(பசுமாடு)5.பிராம்மனன்6.சுமங்கலி7.ராஜா8.சந்நியாசி9.எஜமாநன்(தர்மகர்த்தா)10.பக்த ஜநங்கள்)7.சயநம்:விஹ்ரகத்தை தூங்கவைப்பது போன்ற் பாவனை(சுவாமி தூங்கவாரா என்ன?)8.ஆதார சிலாநியாசம் :இது விஹ்ரகத்தின் அடியில் உள்ள பீடத்தில் தர்ப்பையால் பூஜை செய்வது9.கர்பகிரஹ பதநியாசம்: நாம் அமைத்துள்ள கோவிலின் மூலஸ்தானத்திர்க்கு பூஜை செய்வது10.ரத்ந நியாசம்:ஆதார பீடத்தில் நவரத்னங்களை வைத்துப் பூஜைசெய்வது11.யந்திர ஸ்தாபநம்:அந்தந்த மூர்த்திகளுக்கு உடைய யந்திரத்தகடைஆதாரபீடத்தில் வைத்துப் பூஜை செய்வது12.பிம்பஸ்தாபநம்:பிம்பத்தை அதாவது விஹ்ரகத்தை ஆதாரபீடத்தில்தூக்கிவைத்து நிலை நிருத்துவது13.அஷ்டபந்தனம்:இது எட்டுவகையான்மூலிகைகள் அடங்கிய மருந்தை காய்ச்சி சுவாமியை ஸ்திரப்படுத்துவது(அஷ்டம்-எட்டு பந்தனம்-சுற்றிகட்டுதல்)14.பிம்பசுத்தி:பிம்பசுத்தி என்பது நிலை நிருத்திய விஹ்ரகத்தை தர்ப்பைப்புல்லால் சுத்தம் செய்விப்பது15ரக்க்ஷா பந்தனம்;இது விஹ்ரகத்திற்க்கு காப்பு கட்டுதல்(ரக்ஷை-காப்பு பந்தன்ம்-கட்டுதல்)16.ஸ்பர்ஷாகுதி:இதுபிரதான குண்டத்திலிருந்து தர்ப்பைக்கயிற்றின் வழியாக மூலஸ்தாநத்தில் உள்ள் விஹ்ரகத்திர்க்கு உயிரோட்டத்தை கொன்டு செல்வது.17.நாமகரணம்: சுவாமிக்கு பெயர் வைத்தல்.18.கும்பாபிஷேகம்: புனிதநீரால் குடமுழுக்கு செய்வது. இது அனைவராலும் பொதுவாக செய்யப்படுவது.இதனை தொடர்ந்து அடுத்த பதிவில் இன்னும் விரிவாக சிந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக